Top 10 Best Jobs In India -உயர்ந்த சம்பளம் பெற விரும்புகிறீர்களா? டேட்டா அனாலிடிக்ஸ் முதல் மேலாண்மை திறன் வரை, இங்கு லட்சத்தில் சம்பளம் தரும் பணிகளும், அதற்கான முக்கிய திறன்களை பார்க்கலாம்.
Top 10 Best Jobs In India -உயர்ந்த சம்பளம் தரும் சிறந்த வேலைகள் மற்றும் அதற்குத் தேவையான 10 திறன்கள்.தற்போதைய தொழில்நிலைமையில், திறமையான மேலாண்மைக்கு பெரும் தேவை இருப்பதால், சில துறைகளில் லட்சத்தில் சம்பளம் பெறும் வேலைகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
டேட்டா அனாலிடிக்ஸ்
டேட்டா அனாலிடிக்ஸ் துறையில் நீங்க Python, SQL போன்ற நிரல்மொழிகளில் நிபுணத்துவம் பெற்றால், பல்வேறு பதவிகளில் சேர்ந்து உயர்ந்த சம்பளம் பெறலாம்.
ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட்
அஜைல் மற்றும் ஸ்க்ரம் கருவிகளில் திறமையை வளர்த்துக் கொண்டால், ப்ராஜெக்ட் மேனேஜராக பணியில் சேர்ந்து லட்சத்தில் சம்பளம் பெறலாம்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங்
செயற்கை நுண்ணறிவும் மெஷின் லேர்னிங் துறையும், கணிதம், நியூரல் நெட்வொர்க்குகள் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு தங்க சுரங்கமாகும்.
க்ளவுட் கம்ப்யூட்டிங் எக்ஸ்பெர்ட்
AWS, கூகுள் கிளவுட், அல்லது மைக்ரோசாஃப்ட் அசூர் ஆகியவற்றில் சான்றிதழ் பெற்றால், க்ளவுட் கம்ப்யூட்டிங் துறையில் அதிக வாய்ப்புகளைப் பெற்று கை நிறைய சம்பாதிக்கலாம்.
டிஜிட்டல் மார்கெட்டிங்
SEO, SEM, கன்டென்ட் மார்கெட்டிங் ஆகிய துறைகளில் திறமையானவர்களுக்கு, டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் வேலை பெற்று லட்சங்களில் சம்பாதிக்கலாம்.
சைபர் பாதுகாப்பு
இன்றைய தொழில்நுட்ப உலகில், சைபர் செக்யூரிட்டி மிகவும் முக்கியமானதாக மாற்றம் பெற்றுள்ளது. இந்நிலையில்,பல்வேறு நிறுவனங்கள் நெட்வொர்க் செக்யூரிட்டி மற்றும் ஹேக்கிங் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களுக்கு உயர்ந்த சம்பளம் வழங்க தயாராக உள்ளன.
சாஃப்ட்வேர் டெவலப்பர்கள்
தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்ற விரும்புவோர் சாஃப்ட்வேர் டெவலப்பராக பணியாற்றும் சவுகரியத்தை நன்கு அறிந்திருப்பார்கள்.இந்த துறையில், குறிப்பாக C++, Python போன்ற மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அதிக சம்பளங்களைப் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
விற்பனை துறையில் நிபுணத்துவம்
வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ள துறைகளில், விற்பனை மற்றும் தொழில் வளர்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர்கள், குறிப்பாக லீட் ஜெனரேஷன், பேச்சுத்திறன், விற்பனை திறன் மற்றும் வாடிக்கையாளர்களை கையாளும் திறன்களில் சிறந்தவர்களுக்கு, ஐடி துறையில் உள்ளவர்களை விட அதிக சம்பளம் கிடைக்கும்.
நிதி பகுப்பாய்வு நிபுணத்துவம்
நிதி பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெறுவது, பல்வேறு பதவிகளில் சிறந்த பணிநிலை பெற்றுத் தரும். இது பட்ஜெட் திட்டமிடல், ஃபினான்சியல் மாடலிங் போன்ற துறைகளில் முழுமையான அறிவு மற்றும் திறன்களை அடைவதன் மூலம் சாத்தியமாகும்.
மேலாண்மை திறன்
இன்றைய நிலையில் சிறந்த மேலாண்மை திறனுக்கு பெரும் தேவை உள்ளது. தலைமை பண்புகள், குழுவை திறமையாக வழிநடத்தும் திறன், திட்டமிடுதல் மற்றும் சரியான முடிவெடுக்கும் திறன்களை வளர்த்தால், உயர்ந்த சம்பளம் பெற்றிடும் வாய்ப்பு அதிகரிக்கும்.