The Health Benefits of Tomatoes – நாம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளியில் இருக்கும் பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நாம் தினமும் உணவில் பயன்படுத்தும் தக்காளியில் வைட்டமின் ஏ, சி, கே, பி6, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் தியாமின் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் தக்காளியில் லைகோபீன் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்து காண்ப்படுகின்றன, இது புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கான அபாயத்தை குறைக்க பெரிதாக உதவுகிறது.
தக்காளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் லைகோபீன் ஆகியவை இரத்த அழுத்தத்தை குறைக்க பெருமளவில் உதவுகிறது, இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை கட்டுப்படுத்தவும் தக்காளி உதவுகிறது, தினமும் தக்காளி உணவில் எடுத்துக் கொள்ளும் போது அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ மற்றும் லைகோபீன் ஆகியவை கண் பார்வையை மேம்படுத்தவும் உதவுகின்றன.
தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும், சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவுகின்றன. தக்காளியை அரைத்து ஐஸ்கட்டிகள் உருவாக்கும் ட்ரேயில் ஊற்றி வைத்து அந்த ஐஸ்கட்டியை தினமும் முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பரு குழிகள் மற்றும் கரும்புள்ளிகள் அறவே நீங்கும்.
தக்காளியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் ஆகியவை எலும்புகளை வலுப்படுத்த பெருமளவில் உதவுகின்றன. தக்காளியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது. தக்காளியில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பெருமளவு நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெருமளவில் உதவுகின்றன.