Nellikkai Idli Podi Making Business - நெல்லிக்காயில் இட்லி பொடி தயாரித்து ஒரு குறுப்பிடத்தக்க வருமானம் எப்படி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
மக்கள் தற்போதெல்லாம் ஆரோக்கியமான விடயங்களை தேடி தேடி சென்று வாங்குவதால், நீங்கள் ஒரு ஆரோக்கியமான பொருளை தெரிவு செய்து தயாரித்து சந்தைப்படுத்தினால் அதற்கு மார்க்கெட்டில் மவுசு இருக்கிறது, அதே சமயத்தில் வீட்டு தயாரிப்பு என்றால் அதற்கு கூடுதல் மவுசு, அந்த வகையில் நெல்லிக்காயில் இட்லி பொடி என்பது ஒரு ஆரோக்கியமான சுவையான தயாரிப்பு.
பொதுவாக தமிழகத்தில் காலை மாலை என்றாலே இட்லி தோசை என்பதால் இந்த நெல்லிக்காய் இட்லி பொடிக்கு நல்ல மார்க்கெட் இருக்கதான் செய்கிறது, சரி இதை எப்படி தயாரிப்பது என்றால் முதலில் நெல்லிக்காய், வத்தல், உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு இதை எல்லாம் நன்கு பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும், தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நிறைய இருக்கிறது என்றால் மில்களில் கொடுத்து அரைக்க கொடுக்கலாம், உங்களால் கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸ்சியில் போட்டு அரைக்க முடிந்தாலும் அரைக்கலாம், கடைகலில் குட்டி குட்டி பிளாஸ்டிக் பாட்டில்கள் 5 ரூபாய் 10 ரூபாய்களில் கிடைக்கும் அதில் அரைத்த பொடிகளை போட்டி வைத்துக் கொண்டு அருகில் இருக்கும் வீடுகளுக்கு சந்தைப்படுத்தலாம்.
பேக்கிங் கவர்களில் கொஞ்சமாக போட்டு 5 ரூபாய் பாக்கெட்டுகளாக அட்டைகளில் பின் அடித்து அருகில் இருக்கும் கடைகளுக்கும் கொடுத்து பார்க்கலாம், பொதுவாக 50 கிராம் நெல்லிகாய் இட்லி பொடி நல்ல தரமான சுவையுடன் 50 ரூபாய் வரை சந்தைகளில் விற்கப்படுகிறது, உங்கள் அசலுக்கு ஏற்ப குறைத்து விற்பது உங்கள் முடிவு.
" அந்த வகையில் ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு 1 கிலோ முதல் 3 கிலோ வரை சந்தைப்படுத்தினால் கூட வீட்டில் இருந்து கொண்டே மாதம் ரூ 20,000 வரை வருமானம் பார்த்து விடலாம் ”