• India
```

ஆன்லைனில் தேடக்கூடாத விஷயங்கள் – சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு இருக்கிறது..

Things You Should Never Google

By Dhiviyaraj

Published on:  2025-01-28 09:00:27  |    63

இணையத்தில் தகவல்களை தேடுவது எளிதான விஷயமாக இருந்தாலும், சில விஷயங்களை தேடுவது சட்டப்பூர்வமாகக் குற்றம் என்று கருதப்படுகிறது.

இணையத்தில் தகவல்களை தேடுவது எளிதான விஷயமாக இருந்தாலும், சில விஷயங்களை தேடுவது சட்டப்பூர்வமாகக் குற்றம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, பாதுகாப்பு, தீவிரவாதம், குழந்தை பாதுகாப்பு, ஹேக்கிங் போன்ற விஷயங்கள் தொடர்பான தேடல்கள் பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பில் இருக்கும்.

ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு

 "குண்டு தயாரிப்பது எப்படி?" போன்ற தகவல்களை இணையத்தில் தேடுவது தீவிரவாத நடவடிக்கையாக கருதப்படலாம்.பாதுகாப்பு அமைப்புகள் (Security Agencies) இதைப் பற்றி தொடர்ந்து கண்காணித்து வருவதால், இது சீரியஸ் குற்றமாக மாறலாம். இந்த தகவல்களை தேடுவதால், சந்தேகத்தின் பேரில் சிறை தண்டனை எதிர்கொள்ள நேரிடலாம்.

குழந்தைகள் தொடர்பான தவறான உள்ளடக்கம்

 குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு எதிரான ஆபாசத் தகவல்கள் தேடுவதும் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இதற்காக 5 முதல் 7 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும்.

ஹேக்கிங் மற்றும் சைபர் குற்றம்

"ஹேக்கிங் டுடோரியல்", "ஹேக்கிங் மென்பொருள்" போன்றவற்றை தேடுவது சைபர் குற்றமாக கருதப்படும். சட்டப்படி மற்றவரின் கணினி அல்லது கணக்கு தகவல்களை திருட முயற்சிப்பது குற்றமாகும்.

இந்த குற்றத்திற்கு கடுமையான தண்டனை, சிறைவாசம் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.


Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola