Tax Free Countries In The World - பொதுவாக வரி என்பது ஒரு தனிநபர் மீதோ, ஒரு நிறுவனத்தின் மீதோ, ஒரு தயாரிப்பின் மீதோ, ஒரு சேவையின், இறக்குமதிகளின் மீதோ பல்வேறு நாடுகளில் அவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப விதிக்கப்படுகிறது, இந்தியாவில் ஜிஎஸ்டி என்ற பெயரில் 5 சதவிகிதம் முதல் 28 சதவிகிதம் வரை பல அடுக்குகளாக விதிக்கப்படுகிறது.
பொதுவாக இந்த வரி என்பது நாட்டின் முன்னேற்றத்திற்காக என்றாலும் கூட ஒரு சில மிடில் கிளாஸ்களுக்கும், சிறு குறு தொழில் புரிபவர்களுக்கும் இந்த வரி சுமையாகவே இருக்கிறது, ஒரு சில தொழில் முனைவோர்களால் இந்த வரி விதிப்பால் அசலை போட்டு, அசலைக் கூட எடுக்க முடியாத நிலை இருப்பதாக பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது.
சரி வரியே இல்லாமல் ஏதாவது ஒரு நாடு இருக்கிறதா என்றால் ஆம் நிச்சயம் இருக்கிறது, வளர்ந்த நாடுகள், இயற்கை வளம் மிகுந்த நாடுகள், தொழில் முனைவோர்களை ஈர்க்க நினைக்கும் ஒரு சில நாடுகள் இந்த வரி விதிப்பை அவர்களின் நாடுகளின் நீக்கி இருக்கின்றன, அந்த நாட்டிற்கு அவர்களின் இயற்கை வளங்களே அந்த நாட்டை கட்டமைக்க போதுமானதாக இருப்பதால் வரி விதிப்பதில்லையாம்.
சரி, அப்படி எந்தெந்த நாடுகள் இருக்கிறது என்றால், ஐக்கிய அரபு அமீரகம், பஹாமாஸ், கத்தார், வனுவாட்டு, பஹ்ரைன், சோமாலியா, புருனே உள்ளிட்ட நாடுகளில் தனிநபர் வருமான வரி என்பது ஜீரோவாக இருப்பதாக தகவல், இதனால் பல நாட்டினரும் இத்தகைய நாடுகளில் தங்கள் தொழிலை விரிவுபடுத்த இந்த நாடுகளை நாடுகிறார்களாம், அதே சமயத்தில் தொழிலுக்கான இடம், முதலீடு மட்டும் கொஞ்சம் இந்த நாடுகளில் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.