• India
```

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் இந்த அரசு திட்டத்தில் பதிவு செய்யுங்கள்!! பல நன்மைகள் காத்திருக்கிறது..

Sukanya Samriddhi Account Benefits

By Dhiviyaraj

Published on:  2025-01-21 16:08:35  |    115

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை குறைப்பதற்காக இந்திய அரசு செயல்படுத்திய சிறப்பு சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா.

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை குறைப்பதற்காக இந்திய அரசு செயல்படுத்திய சிறப்பு சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா. தமிழ்நாட்டில் இது செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம், குறைந்த மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களின் மகள்களின் எதிர்கால நலனை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த திட்டத்தில் 8.2% வட்டி வீதம் வழங்கப்படுகிறது, இது பொதுவான சேமிப்பு திட்டங்களை விட அதிகம். மேலும் ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக பணம் செலுத்த தேவையில்லை.

ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் ₹250 முதல் அதிகபட்சம் ₹1,50,000 வரை முதலீடு செய்யலாம். கணக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக முற்றியதும், குழந்தையின் கல்வி அல்லது திருமணத்திற்காக பயன்படுத்தலாம்.

இந்தத் திட்டம், மகள்களின் எதிர்காலத்தைக் காப்பதற்கான சிறந்த முயற்சியாக, ஆயிரக்கணக்கான பெற்றோர்களுக்கு நன்மை அளிக்கிறது. 

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola