Storm Warning Cages Meaning - மழை, புயல் காலங்களில் துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை கூண்டு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Storm Warning Cages Meaning - பொதுவாக புயல் எச்சரிக்கை கூண்டு என்பது மழை மற்றும் புயல்காலங்களில் வானிலையின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை மீனவர்களுக்கும், துறைமுகம் சார்ந்தவர்களுக்கும், துறைமுகம் அருகில் இருப்பவர்களுக்கும் உணர்த்த புயல் கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. மொத்தம் 11 எண்களில் கூண்டுகள் ஏற்றப்படுகின்றன, அந்த ஒவ்வொரு எண்களிலான கூண்டிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒன்றாம் எண் புயல் கூண்டு: புயல் உருவாக கூடிய வானிலையை இது குறிக்கும், இதனால் துறைமுகம் பாதிக்கப்படாது என்றாலும் கூட 60 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் என்பதை இது குறிக்கும்.
இரண்டாம் எண் புயல் கூண்டு: புயல் உருவாகி இருக்கிறது என்பதை உணர்ந்த இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்படுகிறது, காற்று 60 கி.மீ முதல் 90 கி.மீ வரை வீசக்கூடும் என்பதை குறிக்கும்.
மூன்றாம் எண் புயல் கூண்டு: தீடீர் மழை அல்லது காற்று குறித்த அறிவிப்பு வெளியாகும் போது மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்படும்.
நான்காம் எண் புயல் கூண்டு: துறைமுகத்தில் நிலவும் மோசமான வானிலையை இது குறிக்கும், கப்பல்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கும் பட்சத்தில் ஏற்றப்படுகிறது.
ஐந்தாம் எண் புயல் கூண்டு: துறைமுகம் கடுமையான பாதிப்பு உள்ளாகலாம், துறைமுகத்தின் வலது பக்கம் புயல் கரையை கடக்க கூடும் எனும் பட்சத்தில் ஏற்றப்படுகிறது.
ஆறாம் எண் புயல் கூண்டு: துறைமுகம் கடுமையான பாதிப்பு உள்ளாகலாம், துறைமுகத்தின் இடது பக்கம் புயல் கரையை கடக்க கூடும் எனும் பட்சத்தில் ஏற்றப்படுகிறது.
ஏழாம் எண் புயல் கூண்டு: துறைமுகத்திற்கு அருகிலோ அல்லது துறைமுகத்தின் ஊடாகவோ புயல் கரையை கடக்கும் என்பதை உணர்ந்த இந்த கூண்டு ஏற்றப்படுகிறது.
எட்டாம் எண் புயல் கூண்டு: அபாய எச்சரிக்கை, அதி தீவீர புயல் உருவாகி இருப்பதை உணர்த்தும், துறைமுகத்தின் வலது பக்கம் புயல் கரையை கடக்க கூடும் என்பதை உணர்த்த இந்த கூண்டு ஏற்றப்படுகிறது. 90 கி.மீ முதல் 120 கி.மீ வரை புயல் வீசக்கூடும்.
ஒன்பதாம் எண் புயல் கூண்டு: அபாய எச்சரிக்கை, அதி தீவீர புயல் உருவாகி இருப்பதை உணர்த்தும், துறைமுகத்தின் இடது பக்கம் புயல் கரையை கடக்க கூடும் என்பதை உணர்த்த இந்த கூண்டு ஏற்றப்படுகிறது. 90 கி.மீ முதல் 120 கி.மீ வரை புயல் வீசக்கூடும்.
பத்தாம் எண் புயல் கூண்டு: அதீ தீவிர புயல் உருவாகி இருக்கிறது என்பதை உணர்த்தும், மிகுந்த அபாயம் ஏற்படக்கூடும் என்பதை உணர்த்த இந்த கூண்டு ஏற்றப்படும்.
பதினொன்றாம் எண் புயல் கூண்டு: மிக மிக அபாயம் இருக்கிறது என்பதை உணர்த்தும் புயல் கூண்டு, இந்த கூண்டு ஏற்றப்பட்டால் வானிலை ஆய்வு மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பதை உணர்த்தும்.