Steps To Follow If Primary Account Holder Dies Without Nominee - வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் உங்கள் நெருக்கத்திற்கு உரியவர், கணக்கில் நாமினி யாரையும் இணைக்காமல், தவறி விட்டால் அதில் இருக்கும் பணத்தை எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.
அது தான் ATM யில் எடுத்துக் கொள்ளலாமே என்றால், ஒரு வேளை அவர் பிக்ஸடு டெபாசிட் போட்டு வைத்து இருந்தால், RD போட்டு வைத்து இருந்தால் அதெல்லாம் சாத்தியப்படாது அல்லவா, சரி நீங்கள் முதலில் செய்ய வேண்டியது தவறியவற்கான இறப்பு சான்றிதழ் எடுக்க வேண்டும், பின்னர் தவறியவற்கான மகன், மகள், மனைவி, அம்மா, அப்பா அனைவரையும் இணைத்து ஈ சேவையில் ஒரு வாரிசு சான்றிதழ் எடுக்க வேண்டும்.
சில வங்கிகள் ஆவணப்பத்திரங்கள் மூலம் இவர்கள் தான் வாரிசு என அங்கீகரிக்கப்பட்ட வக்கீல்கள் சான்றளித்தாலும் ஏற்றுக் கொள்கின்றன, இருந்தாலும் வாரிசு சான்றிதழ் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது, பின்னர் கையில் வாரிசு மற்றும் இணைப்பு சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு, அத்துனை வாரிசுகளையும் நேரடியாக வங்கிக்கு அழைத்து செல்ல வேண்டும்.
அத்துனை வாரிசுகளும் கையில் ஆதார் அல்லது அரசு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரிஜினல் ஐடி கையில் வைத்து இருக்க வேண்டும், அத்துனை பேரும் ஒரு மனதாக இந்த பணம் இவருக்கு சேர வேண்டும், அல்லது இவ்வாறாக பிரித்துக் கொள்கிறோம் என ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், தவறியவர் வங்கிகணக்கில் போட்டு வைத்து இருக்கும் பணமோ, FD யோ, RD யோ விடுவிக்கப்படும்.
இவ்வாறாக இத்துனை பிரச்சினைகளை தாண்டி பணத்தை பெறுவதற்கு பதிலாக, ஒரே ஒரு ஆதார் கையில் எடுத்துக் கொண்டு தவறாமல் வங்கி கணக்கில் நாமினி இணைத்துக் கொள்ள வேண்டும், இல்லையேல் கூட்டுக் கணக்காகவாவது வைத்துக் கொள்ள வேண்டும், கூட்டுக்கணக்காக இருக்கும் பட்சத்தில் தவறியவரின் இறப்புச்சான்றிதழ் மட்டும் கொடுத்தாலே இரண்டாவது வங்கிக் கணக்காளர் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.