Small Onion Health Benefits - அன்றாடம் நாம் சமையலுக்கு பயன்படுத்துகின்ற பொடி வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சித்தா மற்றும் ஆயுர்வேதங்களில் சின்ன வெங்காயம் என்பது ஒரு சில மருந்துகளுக்கு இன்றிமையாமல் பயன்படுத்தும் ஒரு கூறாக இருந்து இருக்கிறது, சிறியதாகவும், சற்று இனிப்பு சுவையுடையதாகவும் இருக்கும் இந்த பொடி வெங்காயம் தென்னிந்திய சமையல்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
சரி சமையலுக்கு பயன்படுத்துகிறோம் சரி, இந்த பொடி வெங்காயத்தில் அப்படி என்ன மருத்துவ பலன்கள் இருக்கிறது என்றால், பொடி வெங்காயத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை பெருமளவில் குறைக்க உதவுகிறது, தினசரி காலை நீத்தண்ணீர் உடன் ஒரு நான்கு வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் படிப்படியாக குறையும்.
பொடி வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்து உள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு மட்டும் அல்லாமல் உடலில் தொற்று நோய்கள் எதிர்ப்பை மேம்படுத்துகிறது, பொடி வெங்காயம் உடலின் நாளங்களில், உறுப்புகளில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
பொதுவாக செரிமான சக்தி குறைவாக இருக்கும் வயது முதிர்ந்தோர்கள், தங்கள் சமையலில் தினசரி பொடி வெங்காயத்தை சேர்த்து, உணவோடு சாப்பிட்டு வந்தால் அது செரிமானத்தை நன்கு மேம்படுத்த உதவுகிறது, வாரத்திற்கு இரு முறை பொடி வெங்காயம் தொக்கு ஆக செய்து உணவுடன் வைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாக குறையும்.