Sirukan Peelai Health Benefits - கண்பூளை செடி மற்றும் பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கும்.
அது என்ன கண்பூளை செடி இது எங்க இருக்கும் நாம எதுக்காச்சு பயன்படுத்து இருப்போமே அப்படின்னு கேட்டீங்கன்னா, கண்டிப்பா எல்லா வீட்லயுமே பயன்படுத்தி இருப்போம், எப்ப பயன்படுத்துவோம் தெரியுமா, பொங்கல் அன்னிக்கு இந்த செடி இல்லாம பொங்கலே விட மாட்டோம், வெள்ள கலர் பூவோட சிறு சிறு இலையோட இருக்குமே பொங்கல் பூனு கூட சொல்லுவாங்க, அது தான் கண்பூளை செடி.
அந்த செடிய தான் நாம பொங்கல் பானைல கட்டிட்டு பொங்கலே விடுவோம், சரி அப்படி என்ன இந்த செடில இருக்கு அப்படின்னு கேட்டீங்கன்னா, கண்பூளை செடி பொதுவாக அந்த கால ஆயுர்வேத மருத்துவங்களில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தது, தற்போதைய சித்தா மற்று ஆயுர்வேதங்களில் சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கண்பூளைச்செடி உதவுகிறது.
சிறுநீரில் இரத்தம் மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது. உடல் சூட்டைத் தணிக்க உதவுகிறது.மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. கண்பூளை இலை மற்றும் பூவை அரைத்து முகங்களில் தேய்த்து வந்தால் சரும நோய்களை அறவே நீக்கலாம், கண்பூளை செடியை வெறும் நீரீல் போட்டு உலர வைத்து கண்களை கழுவி வந்தால் பார்வை தெளிவாகும்.
கண்பூளை இலை மற்றும் பூக்களை நன்கு வெந்நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்களை எல்லாம் அது வெளியேற்றி விடும், கண்பூளையில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை பெற்றது, வாரத்திற்கு ஒருமுறை கண்பூளை கசாயம் குடித்து வந்தால் தொற்று நோய்களை அறவே விரட்டலாம்.