மாதுளை பழம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். ஆனால், சிலருக்கு அது சில அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடும்.
மாதுளை பழம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். ஆனால், சிலருக்கு அது சில அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடும்.
மாதுளை பழம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களும், உயர் ரத்த அழுத்தக் க்காக மருந்து எடுத்துக் கொள்பவர்களும், மாதுளையை உணவில் சேர்ப்பதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
கொழுப்பு கல்லீரல் அல்லது கொலஸ்டிரால் குறைக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு, மாதுளை பழம் சில நேரங்களில் கல்லீரலின் செயல்திறனை பாதிக்கலாம். அதனால், இது தொடர்பாக மருத்துவரிடம் முன்கூட்டியே ஆலோசனை பெறுவது நல்லது.
மாதுளை பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரக செயல்பாட்டை மெதுவாக்கக்கூடும், எனவே சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மாதுளையில் உள்ள நார்ச்சத்து சிலருக்கு செரிமான கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, அதிக நார்ச்சத்து உணவால் டயேரியா ஏற்படுபவர்கள் இதைச் சீராகக் குறைத்து எடுத்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு மற்றும் அழற்சி தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் மாதுளை பழத்தை அதிகம் உண்பதை மருத்துவரின் ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டும்.