நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பது தான் தண்ணீர்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பது தான் தண்ணீர். அந்த தண்ணீரை நாம் பிளாஸ்டிக் பாட்டில், காப்பர் பாட்டில் மூலமாக வாட்டர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தண்ணீர் அருந்த எந்த பாட்டில் சிறந்தது என்பது தொடர்பாக இன்று பார்ப்போம்.
பாட்டில் உருவாக்க பயன்படுத்தும் ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதில் நன்மைகள் தீமைகள் இருக்கிறது. இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் பல வண்ணங்களில் விற்பனையாகி வருகிறத. இதில் நன்மை மற்றும் தீமை இரண்டுமே இருக்கிறது. அதாவது இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் BPA என்று ரசாயனத்தை பயன்படுத்துகிறார்கள் . இதனால் இந்த பாட்டில்கள் நாம் குடித்தோம் என்றால் உடலுக்கு பல தீமைகள் உண்டாக்கும்.
காப்பர் பாட்டில்களில் குடிக்கும் போது உடலில் இருக்கும் தாமிர குறைபாட்டினை சரி செய்கிறது. மேலும் இதில் தண்ணீரில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் திறன் இருக்கிறது. காப்பர் பாட்டில்களில் குடிப்பது நல்லதாக இருந்தாலும், அந்த பாட்டிலை சரியாக பராமரிக்கவிலை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படும்.