• India
```

அதிவேக இணைய சேவை!! இந்தியாவில் விரைவில் களம்காணும் எலான் மஸ்க்..

 Starlink Could Launch in India Soon

By Dhiviyaraj

Published on:  2025-01-30 17:08:06  |    133

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக பிராட்பேண்ட் இணைய சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தைப் பெற, இந்திய அரசின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக பிராட்பேண்ட் இணைய சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தைப் பெற, இந்திய அரசின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்திய பயனர்களின் தரவுகளை நாட்டின் எல்லைக்குள் சேமிக்க வேண்டும் என்பதுடன், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக புலனாய்வு அமைப்புகளுக்கு தேவையான தரவுகள் அணுகல் வழங்கப்படும் என்ற நிபந்தனையையும் ஸ்டார்லிங்க் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம், இந்திய சந்தையில் ஸ்டார்லிங்கின் செயல்பாடு உறுதியாகும் எனக் கூறப்படுகிறது.

அதுவே, சில நிபந்தனைகளில் தளர்வு கோரியுள்ள ஸ்டார்லிங்கின் விண்ணப்பம், உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்தியாவில் ஸ்டார்லிங்கின் சேவைகள் படிப்படியாக அறிமுகமாகும்.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் நேரடியாக இணைய சேவையை வழங்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதற்காக 14,600 செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளது. 400 செயற்கைக்கோள்கள் அடிப்படை இணைய சேவையை வழங்க, 800 செயற்கைக்கோள்கள் உயர் வேக இணைய சேவையை வழங்கும்.

தற்போது, ஸ்பேஸ் எக்ஸ், உலகிலேயே அதிக செயற்கைக்கோள்களை இயக்கும் தனியார் நிறுவனமாக மாறியுள்ளது. விண்வெளியில் ஒரு நீண்ட தொடராக வலம் வரும் இந்த செயற்கைக்கோள்கள், அனுமதி வழங்கப்பட்ட நாடுகளுக்கு எந்த மூலையிலும் இணையத்தை வழங்கும் திறன் பெற்றுள்ளன.