Selva Magal Saving Scheme Tamil - சேமிப்பு என்பது எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த தேவையாக இருக்கிறது, அந்த வகையில் உங்கள் மகளுக்கான ஒரு சிறந்த எதிர்கால சேமிப்பு திட்டமாக அமைகிறது இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டம்.
Selva Magal Saving Scheme Tamil - தபால் நிலையம் மகள்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அறிமுகப்படுத்தி இருக்கும் ஒரு அசத்தலான சேமிப்பு திட்டம் தான், இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம், இத்திட்டத்தின் மூலம் மாதத்திற்கு 250 ரூபாய் மூதல் 12,500 வரையிலும் சேமிக்கலாம், 15 வருடம் இது போல இத்தொகையை மாதத்தவணையாகவோ, வருடத்தவணையாக கட்ட வேண்டி இருக்கும், 6 வருடம் காத்திருப்பு காலமாக அறியப்படுகிறது. குழந்தைகள் வயது வரும் காலம் வரை அவருடைய அப்பா அல்லது அம்மா அக்கவுண்ட்டில் இணைந்து செயல்படுவர்.
சரி, இத்திட்டத்தின் பலன் என்ன?
1) இத்திட்டத்தின் சேமிப்பு என்பது முழுக்க முழுக்க மகள்களின் எதிர்கால திட்டங்களுக்கு உதவிகரமாக அமையும் வகையில் இருக்கும்,
2) இத்திட்டத்திற்காக வேறு எந்த பொதுத்துறை நிறுவனங்களும் தராத லாங்க் டர்ம் வட்டியை தருகிறது,
3) இத்திட்டம் எந்தவொரு ஷேர் மார்க்கெட் ரிலேட்டடு திட்டம் இல்லை என்பதால் உங்களது பணத்திற்கான பாதுகாப்பானது உறுதி செய்யப்படுகிறது,
4) நீங்கள் கட்டிய தொகையை விட குறைந்த பட்சம் இரண்டு மடங்கு தொகையை முதிர்வின் காலத்தில் உங்களால் பெற முடிகிறது,
5) முதலீடு செய்யும் தொகைக்கு வரிவிலக்கு உண்டு.
6) நீங்கள் வருடாந்திர தொகை பிளக்சிபில் ஆக கட்ட வாய்ப்பு அளிக்கப்படுகிறது, நீங்கள் மாதம் மாதம் குட்டி குட்டி தவணையாகவோ, 6 மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்தவணையாகவோ கட்ட வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
சரி, எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
1) மாதத்திற்கு 500 ரூபாய் - வருடத்திற்கு 6,000 ரூபாய் - கட்டும் அசல் 90,000 ரூபாய் - முதிர்வு தொகை 1,83,488.66 ரூபாய்
2) மாதத்திற்கு 1000 ரூபாய் - வருடத்திற்கு 12,000 ரூபாய் - கட்டும் அசல் 1,80,000 ரூபாய் - முதிர்வு தொகை 5,54,611.52 ரூபாய்
3) மாதத்திற்கு 2000 ரூபாய் - வருடத்திற்கு 24,000 ரூபாய் - கட்டும் அசல் 3,60,000 ரூபாய் - முதிர்வு தொகை 11,09,223.04 ரூபாய்
4) மாதத்திற்கு 5000 ரூபாய் - வருடத்திற்கு 60,000 ரூபாய் - கட்டும் அசல் 9,00,000 ரூபாய் - முதிர்வு தொகை 27,73,057.60 ரூபாய்
5) மாதத்திற்கு 7000 ரூபாய் - வருடத்திற்கு 84,000 ரூபாய் - கட்டும் அசல் 12,60,000 ரூபாய் - முதிர்வு தொகை 38,82,280..64 ரூபாய்
6) மாதத்திற்கு 10,000 ரூபாய் - வருடத்திற்கு 1,20,000 ரூபாய் - கட்டும் அசல் 18,00,000 ரூபாய் - முதிர்வு தொகை 55,46,115.20 ரூபாய்
7) மாதத்திற்கு 12,500 ரூபாய் - வருடத்திற்கு 1,50,000 ரூபாய் - கட்டும் அசல் 22,50,000 ரூபாய் - முதிர்வு தொகை 63,79,630.49 ரூபாய்
" இந்த வகை சேமிப்பு திட்டங்களில் நீங்கள் கட்டும் அசலில் எந்த மாற்றமும் இருக்காது, ஆனால் வட்டி வீதத்தில் மாற்றம் இருக்கலாம், இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது வருடாந்திர வட்டி வீதம் 9.1 சதவிகிதமாக இருந்தது, பின்னர் 8 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்தது, தற்போது 8.20 சதவிகிதமாக இருக்கிறது, இந்த வட்டி விகிதம் குறையலாம், அதிகரிக்கலாம் ஆதலால் உங்கள் முதிர்வு தொகையில் எந்த வித மாற்றமும் இருக்க கூடும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் "