Salt Business in India-உலகளாவிய அளவில் பல தொழில்துறைகளில் முன்னனி நிறுவனமாக அறியப்படும் டாடா எப்படி உப்பு தயாரிப்பில் ஈடுபட்டது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரபல டாடா நிறுவனம் உப்பு தயாரிப்பில் ஈடுபட்டதற்கு பொதுவாக இரண்டு கதைகள் சொல்லப்படுகிறது, அந்த இரண்டையுமே இங்கு விரிவாக பார்க்கலாம். அதாவது 1980 காலக்கட்டத்தில் தேசம் எங்கும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியதாக கூறப்படுகிறது, சாதாரண ஒரு குடும்பத்தை இயக்கவே எவ்வளவு தண்ணீர் தேவைப்படும், அப்படி என்றால் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை இயக்க எவ்வளவு தண்ணீர் தேவைப்பட்டு இருக்கும்? உடனடியாக யோசித்த, டாடா நிறுவனம் தனது தொழிற்சாலைகளை இயக்க கடல் நீரை உபயோகிப்பது என முடிவெடுத்ததாம். அந்த கடல் நீரை தொழிற்சாலைகளுக்கு உபயோகித்த போது அதன் பை பிராடக்டாக உப்பு கிடைத்து இருக்கிறது. சரி அந்த உப்பை என்ன செய்வது என யோசித்த நிறுவனம், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மூலம் டாடா சால்ட் ஆக்கி இருக்கிறது. அவ்வாறாக உருவானது தான் டாடா சால்ட் என்கின்றனர் ஒரு சிலர், 1983 ஆம் ஆண்டில் பிராண்ட் ஆக்கப்பட்ட டாடா சால்ட், தேசத்தின் முதல் பிராண்டடு உப்பு ஆக பார்க்கப் படுகிறது.
சரி இன்னொரு கதையையும் பார்ப்போம், டாடாவைத் தேடி ஒரு இளைஞன் நிறுவனத்திற்கு 10 நாட்களாக தொடர்ந்து வந்து கொண்டு இருந்து இருக்கிறான், ஆனால் நிறுவனமோ டாடா அவர்களை 10 நாட்களும் பார்க்கவிடவில்லை. ஆனால் அந்த இளைஞன் தொடர்ந்து டாடா வரும் பகுதியில், அவர் கண் படும் தூரத்தில் உட்கார்ந்து அவரது கவனத்தை பெற முயற்சித்து கொண்டே இருப்பானாம். ஒரு நாள் டாடாவே அந்த இளைஞன் யார் என்று கேட்டு இருக்கிறார். ஊழியர்கள், ‘அந்த இளைஞன் ஏதோ தொழில் விஷயமாக உங்களிடம் பேச வேண்டுமாம், 10 நாட்களாக வந்து செல்கிறான்’ என்றதும் அடுத்த நாள் 15 ந்மிடங்கள் அப்பாயின்ட்மென்ட் கொடுத்து இருக்கிறார். அடுத்த நாள் வந்த இளைஞன், முன்னதாகவே அந்த 15 நிமிடத்தை எவ்வாறு உபயோகிப்பது என திட்டமிட்டே வந்து இருந்தான்.
டாடா உள்ளே நுழைந்தார். இளைஞனை அழைக்கிறார், நேரடியாக இளைஞன் விடயத்திற்கு வந்தான், ‘நீங்கள் உப்பு தொழில் செய்ய வேண்டும்’ என்றான், நான் எதற்கு, அந்த தொழிலில், அந்த தொழில் அப்படி என்ன பெரிதாக இருக்கிறது?’ என கேட்டு இருக்கிறார். ’ஒரு நாளில் ஒவ்வொருவரும் உபயோகிக்கும் ஒரு பொருள் என்றால் அது உப்பு தான், உப்பு இல்லாத வாழ்வை ஒருவரையும் கடந்து விட முடியாது’ என பதில் அளித்தாராம், ஒரு இரண்டு நிமிடங்கள் யோசித்த டாடா சரி என்று ஒப்புக் கொண்டாராம். அடுத்த ஒரிரு நாளில் டாடா பிராண்டில் உப்பு வெளியானதாம். டாடா சால்ட்டிற்கு இப்படி இரு கதையும் இருக்கிறது. இரண்டு கதைகளில் எது உண்மை என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் இரண்டுமே டாடா சால்ட் உருவான கதை என்று பொதுவெளியில் கூறப்பட்டு வருகிறது.
இன்றளவுமே யோசித்தால், டாடா என்னும் ஒரு மிகப்பெரிய நிறுவனம், ஏன் உப்பு உருவாக்கத்தில் ஏன் ஈடுபட்டது என்பது ஒரு புரியாத புதிர் ஆக தான் இருக்கிறது, புதிருக்கு விடை இந்த இரண்டு கதைகள் தானா, இல்லை மூன்றாவதாக ஏதும் கதை இருக்கிறதா என்பதை டாடா நிறுவனமே சொன்னால் தான் தெரியும்