• India

குழந்தை பெற்றெடுக்கும் மாணவியருக்கு ரூ.84,000 உதவி தொகை.. அரசு அதிரடி முடிவு!!

Russia Offers Cash Incentives for Students to Boost Birth

By Dhiviyaraj

Published on:  2025-01-11 08:41:27  |    108

சீனா, ஜப்பான், தென்கொரியா  ரநாடுகளைத் அடுத்து ரஷ்யாவிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, உக்ரைனுடனான போர் காரணமாக, இந்த நிலை மோசமடைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

குறைவான பிறப்பு விகிதம், முதியவர்களின் இறப்பு மற்றும் குடியேற்றமும் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா அரசு ஊக்கத்தொகை, வீட்டு வசதி எனப் பல நடவடிக்கைளை செய்து வருகிறது.

இப்படி இருக்கும் சூழலில், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு, இந்திய மதிப்பில் ரூ 84,000 வழங்க அரசு முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.


இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க உள்ளூர் பல்கலைக்கழகம் அல்லது கல்லுாரியில் முழுநேர மாணவியராகவும், கரேலியா மாகாணத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்று  அரசு  அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு முதல் முதன்முறையாக தாய்மை அடைவோருக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்  என்றும் ரஷ்யா அரசு தெரிவித்து இருக்கிறது.