• India
```

RTE Scheme என்பது என்ன...நலிந்த மாணவர்களுக்கு இத்திட்டத்தால் என்ன பயன்...?

RTE Scheme Details Tamil

By Ramesh

Published on:  2025-03-01 14:08:41  |    483

Details of the RTE Scheme - கட்டாய கல்வி உரிமை என அழைக்கப்படும் RTE Scheme குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

நாட்டின் கடைக்கோடி மக்களும் கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் 2009 ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டம் என்பது கொண்டு வரப்பட்டது, இத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச கல்வி, அது போக பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர நினைத்தால் அங்கும் 25 சதவிகிதம் அவர்களுக்கென இடஒதுக்கீடு என பல நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன.

இத்திட்டத்தின் ஆகச்சிறந்த நோக்கம் என்பது பணம் இல்லை என்பதற்காக படிப்பை விட நினைக்கும் மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டும் என ஆசை கொள்ளும் நலிந்த மாணவர்களுக்கும் கல்வி தடையில்லாமல் போய் சேர வேண்டும் என்பது தான், சரி இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் எப்படி இணைவது என்பது குறித்து பார்க்கலாம்.

முதலில் இத்திட்டத்தின் கீழ் இணைய மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு இரண்டு இலட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும், பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கும், பின் தங்கியவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது, மேலும் இத்திட்டத்தின் கீழ் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கூட இலவசமாக கல்வி கற்க முடியும், 

ஒரு பள்ளிக்கு விண்ணப்பிப்பவர்கள் 25% க்கும் அதிகமாக இடஒதுக்கீட்டின் வந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படுவார்கள், அதில் மிஞ்சி இருப்பவர்கள் வெயிட்டிங் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டு வேறு எங்கும் காலி இடங்கள் இருந்தால் அங்கு அட்மிசன் செய்யப்படுவார்கள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்களில் ஒருவரை இழந்தவர்களுக்கு குலுக்கல் முறை இல்லாமல் நேரடியாக அட்மிசன் கிடைக்கும்.

" 2009 முதல் செயல்பட்டு வரும் இந்த கட்டாய கல்வி முறையால் தமிழகத்தில் பெருமளவில் கல்வி விகிதம் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது "

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola