RRB Group D Online Application - ரயில்வே துறையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் Group D பதவிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்
ரயில்வே துறையில் குரூப் D பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைனில் வரவேற்கப்பட்டு கொண்டு இருக்கின்றன, டிராக் மெயிண்டனட், பாயிண்ட்ஸ் மேன், ஹெல்பர் என பல துறைகளில் 32,438 பதவிகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன, RRB Chennai தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் இந்த பதவிகளுக்காக தேர்வுகளுக்கு பதிவு செய்ய முடியும்.
பதிவு செய்ய நினைப்பவர்கள் முதலில் https://www.rrbapply.gov.in/#/auth/landing என்ற தளத்திற்குள் நுழைந்து கொள்ள வேண்டும், Apply என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும், உங்களுக்கு ஏற்கனவே அக்கவுண்ட் இருக்கும் பட்சத்தில் Already Have An Account என்ற ஆப்சனை க்ளிக் செய்யலாம், இல்லையேல் Create An Acount என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்.
கேட்கப்படும் தகவல்களை எல்லாம் சரியாக உள்ளிட்டு, ஈமெயில், மொபைல்களுக்கு வரும் OTP களை உள்ளிட்டு ஆதார் எண்ணையும் உள்ளிடும் பட்சத்தில் தகவல்கள் அதுவாக சரிபார்க்கப்பட்டு, கடவுச்சொல்லை கிரியேட் செய்ய சொல்லும், பின்னர் மொபைல் எண் பாஸ்வேர்டுகளை உள்ளிட்டு பதிவு செய்யும் பகுதிக்கு சென்று கேட்கப்படும் தகவல்களை உள்ளிட்டால் பதிவாகி விடும்.
Photo, Sign உள்ளிட்டவைகள் தெளிவானதாகவும் RRB குறிப்பிட்டு இருக்கும், அளவுகளிலும் இருப்பது முக்கியமானது, SC/ST/PWD/Female கேட்டகரிகளுக்கு ரூ 250 விண்ணப்ப கட்டணமும், ஜெனரல் கேட்டகரிகளுக்கு ரூ 500 விண்ணப்ப கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது, விண்ணப்பங்கள் பதிவு செய்ய கடைசி தேதி 22:02:2015 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.