இந்தியாவில் பிரபலமான ராயல் என்ஃபீல்டு, ஸ்கிராம் 411 பைக்கின் விற்பனையை நிறுத்தியுள்ளது
இந்தியாவில் பிரபலமான ராயல் என்ஃபீல்டு, ஸ்கிராம் 411 பைக்கின் விற்பனையை நிறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்கிராம் 440 பைக்கின் புதிய அப்டேட்டுடன் வெளியீடு செய்யப்பட்ட நிலையில், 411 பைக்கின் விற்பனையை நிறுத்தி புதிய மாடலை அறிமுகப்படுத்தியது.
முந்தைய 411 சிசி இன்ஜின் கொண்ட ஹிமாலயன் 411 மற்றும் ஸ்கிராம் 411 ஆகிய இரண்டு மாடல்கள் விற்பனையாகி வந்தன. இப்போது, 452 சிசி இன்ஜினுடன் அப்டேட் செய்யப்பட்ட ஹிமாலயன் மற்றும் ஸ்கிராம் 440-ஐ அறிமுகப்படுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு, அதன் மாடல் வரிசையில் 411 பைக்கை நீக்கியுள்ளது.