• India

Repo VS Reverse Repo | இரண்டுக்கும் என்ன வித்தியாசம்...இவற்றிற்கும் இந்திய பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு...!

Repo VS Reverse Repo

By Ramesh

Published on:  2024-12-23 22:49:22  |    72

Repo Rate VS Reverse Repo Rate - இங்கு எல்லோருக்குமே ஒரு கடன் தேவை என்பது இருக்கும், அது போல வங்கிகளுக்கு சில இக்கட்டான சூழலில் கடன் தேவைப்படும், அது போல மத்திய வங்கியான ரிசர்வ் வங்கிக்கும் சில சமயங்களில் கடன் தேவைப்படும், இந்த வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கிகளுக்கு இடையிலான இந்த கடன் பரிமாற்றங்கள் தான் நாட்டின் பொருளாதார சமநிலையையும், பண புழக்கத்தையும் தீர்மானிக்கின்றன.

பொதுவாக Repo Rate என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் கொடுக்கும் போது, அந்த கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் ஒரு வட்டி வீதம் ஆகும், ரிசர்வ் வங்கி ஆனது வங்கிகளுக்கு விதிக்கும் இந்த வட்டி வீதத்தை பொறுத்து தான், வங்கிகள் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி, பயனர்களுக்கு கொடுக்கும் கடன்களுக்கான வட்டி உள்ளிட்டவைகளை தீர்மானிக்கின்றன,




பொதுவாக இந்த Repo Rate நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது, தற்போதைய Repo Rate என்பது இந்தியாவில் 6.5% ஆக இருக்கிறது, அதே சமயத்தில் Reverse Repo Rate என்பது ரிசர்வ் வங்கி என்பது வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கு திருப்பி கொடுக்க வேண்டிய வட்டி சதவிகிதம் ஆகும், இது தற்போது இந்தியாவில் 3.35 சதவிகிதமாக இருக்கிறது.

பொதுவாக வங்கிகளிடம் பணம் இருக்கும் போது அதை பெரு முதலாளிகளுக்கு கடனாக கொடுத்து விட்டு திரும்ப பெற முடியாமல் திணறி நிற்கும், அதே சமயத்தில் அந்த பணத்தை, ரிசர்வ் வங்கிக்கு கடனாக, ஒரு குறைவான வட்டி வீதத்தில் கொடுத்தாலும் கூட, வங்கிகளுக்கு ஒரு குறிப்பிட்ட ரிட்டன்ஸ் ஆவது தரும்,  இந்த Reverse Repo என்பது நாட்டில் பண புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காக அமைகிறது.