செவ்வாழைப் பழம் சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் வாங்க..
செவ்வாழையில் மூளையின் செயல்பாடு, இதயம், ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் குடல் இயக்கம் ஆகியவற்றிற்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
செவ்வாழைப் பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம்
*காலை 6:00 மணி – செவ்வாழைப்பழத்தைச் சாப்பிட ஏற்ற நேரம்.
* இது சாத்தியமில்லையென்றால் மதியம் 11:00 மணி (பிரேக் நேரம்) அல்லது மாலை 4:00 மணிக்கு சாப்பிடலாம்.
*உணவு எடுத்தவுடன் செவ்வாழை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், இதனால் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்காது, மேலும் உடலில் மந்த நிலை ஏற்படலாம்.
செவ்வாழையின் மருத்துவ நன்மைகள்
1.நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவில் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.
2. 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், நரம்புகள் உறுதி பெறும்.
3. பல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், 21 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டால், பற்கள் வலுவாகும். மருத்துவ ரீதியாக உடல் வலுவூட்டும் காயகல்ப உணவாக செவ்வாழைப் பழம் பயன்படுத்தப்படுகிறது.