நாட்டின் பல்வேறு பகுதிகளில் கள்ள நோட்டுகள் மீண்டும் பரவலாகக் கண்டறியப்பட்டு வருகின்றன. ரூ.500 போலி நோட்டுகள் ஏற்கனவே மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த நிலையில், தற்போது ரூ.200 நோட்டுகளும் போலியாக அச்சிடப்பட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போலி ரூபாய் நோட்டுகள் உயர் தரத்தில் வண்ண ஜெராக்ஸ் மூலம் அச்சிடப்படுகின்றன. நோட்டுகளின் தடிமன்,வண்ண அமைப்பு,மேலும் அதன் படம் மற்றும் சின்னங்கள், எல்லாவற்றும் உண்மையான ரூபாய் போலவே இருக்கும். இதனால், போலி நோட்டுகளை கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் ரிசர்வ் வங்கி அதை எப்படி கண்டுபிடிப்பது குறித்த தகவலை தெரிவித்து இருக்கிறது. அதன்படி இடதுபுறம் தேவநாகரி எழுத்தில் 200 எழுதப்பட்டிருக்கும். மேலும் நடுவில் மகாத்மா காந்தியின் தெளிவான படம் இருக்கும் போலி நோட்டைப் பெற்றால், உடனடியாக உள்ளூர் நிர்வாகத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கோ தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். மேலும், 200 ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.