Ration Card Rejection Handling - ரேசன் கார்டுக்கான விண்ணப்பம் பல முறை பதிவு செய்தும் தொடர்ந்து ரிஜக்ட் ஆகிட்டே இருக்கு, என்ன பண்ணுறதுன்னு தெரியல! அப்படின்னு சொல்லுறவங்களுக்கு தான் இந்த தொகுப்பு.
Ration Card Rejection Handling - பொதுவாக
ரேசன் கார்டு என்பது அரசு தரும் மானிய பொருள்களை பெறுவதற்கும், அரசின் பல்வேறு திட்டங்களை அணுகுவதற்கும் கொடுக்கப்படுகின்ற ஒரு பண்டக அட்டை, பொதுவாக ஒரு குடும்ப அட்டை பெறுவதற்கு, குடும்பத்தில் குறைந்த பட்சம் இரண்டு பேர் ஆவது இருக்க வேண்டியது அவசியம், புதியதாக திருமணம் ஆனோரும் தங்கள் பெயர்களை அவரவர் பழைய ரேசன் கார்டுகளில் இருந்து நீக்கி விட்டு, தனியாக ஒரு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
தற்போது
குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் ஆன்லைன் விண்ணப்பம் என்பதால், யாரையும் நேரடியாகச் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனாலும் உங்களது விண்ணப்பம் ரிஜக்ட் ஆகும் பட்சத்தில், உங்களது தாலுகாவில் இருக்கும் வட்டார வழங்கல் அலுவலரை அணுக வேண்டியது அவசியம், ஏன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை கேட்டு அறிந்து அதனை உடனடியாக சரி செய்தல் வேண்டும்.
பொதுவாகவே விண்ணப்பம்
நிராகரிக்கப்
படுவதற்கு
குறிப்பிட்ட
சில
காரணங்களே
உள்ளன!
2) முறையாக பதிவு செய்யப்படாத கேஸ் இணைப்பை கொண்டு இருத்தல்
3) விண்ணப்பத்துடன் முறையாக இணைக்கப்படாத நீங்கள் வசிக்கும் வீட்டின் சொத்து தீர்வை அல்லது வாடகை ஒப்பந்தம்
4) ஆய்வாளர் ஆய்விற்கு வரும் போது வீடு பூட்டி இருத்தல்
5) ஆய்வாளர்கள்
ஆய்விற்கு வரும் போது வீடுகளில் அடுப்புடன் கூடிய சிலிண்டர் இல்லாமல் இருத்தல். பொதுவாக இந்த வகை காரணங்கள் தான் ரேசன் கார்டுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான காரணம் ஆக அறியப்படுகிறது.
சரி, விண்ணப்பத்தை
100 சதவிகிதம் ஏற்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
2) முகவரி மாற்றுவதற்கு சிரமம் என்றால் ஈ-சேவை மையங்களுக்கு சென்று முகவரி சான்று வாங்கி கொள்ளுதல் அவசியம்.
3) ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக நீங்கள் மட்டும் மாடியில் இருக்கிறீர்கள் என்றால், மாடிக்கு தனி தீர்வை போட்டு, தனி வீட்டு எண் எடுத்துக் கொள்ள வேண்டும்.
4) வாடகை வீட்டில் இருந்தால், அந்த வீட்டு தாரருடன் போட்டுக் கொணட வாடகை ஒப்பந்தம் அவசியம்.
5) நீங்கள் வசிக்கும் முகவரியில் எடுத்துக் கொண்ட கேஸ் கனெக்சனுக்கான புத்தகம் அவசியம்.