Ration Card News Today -ரேஷன் கார்டுகளை துரிதமாக வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள தமிழக அரசு, தரமான சேவைகளையும் வழங்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
Ration Card News Today -ரேஷன் கடைகளில் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவர்களை உபசரிக்கும் விதமும் வாடிக்கையாளர்களை முகம் சுளிக்கும்படி அமைவதே வழக்கமாக இருந்து வருகிறது.ஆனால் இனி அந்த தொல்லை இல்லை.தமிழக அரசின் புதிய மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸாக அமைந்துள்ளது.
ரேஷன் கார்டு, தமிழ் நாட்டில் ஏழை மற்றும் பொருளாதார வசதி குறைந்த மக்களுக்கு அரசு ரேஷன் கார்டுகளை வழங்கி வருகிறது. இந்த ரேஷன் கார்டுகளின் மூலம் அனைத்து குடும்பங்களும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை பெற்று வருகின்றனர். இவை மட்டுமின்றி, பொங்கல் பரிசு பொருட்கள், மகளிர் உரிமைத் தொகை, வெள்ள நிவாரணத் தொகை போன்ற உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை, ரேஷன் அட்டை தாரர்களுக்கு உயர் தரமான பொருட்களும் மற்றும் நேரத்திற்கேற்ற பொருட்கள் அவர்களை சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்தவும், ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் பயனாளிகளிடம் அங்கிருக்கும் ஊழியர்கள் பண்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டு, ரேஷன் கடைகளை மாடல் அங்காடிகளாக மாற்றியதில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து, தேவையான இடங்களில் ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பகுதி மற்றும் முழுநேர நியாயவிலை அங்காடிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புதிய ரேஷன் கார்டுகள் பெறும் விண்ணப்பங்களை ஒப்புதலுக்கு உட்படுத்தி, அதற்கான புதிய மின்னணு குடும்ப அட்டைகளை விரைந்து அச்சிட்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமுதம் அங்காடிகள், குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்யும் அமுதம் அங்காடிகளை மாவட்டம் தோறும் திறந்து குறைந்தது 100 அங்காடிகளை அமைத்து மக்களுக்குத் உயர்ந்த தரமான மற்றும் வெளிச்சந்தை விலையை விடக் மலிவாக பொருட்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல்,தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலைத் தடுக்க, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்களை கைப்பற்றப்பட்டிருந்தது வாகனங்களை விரைவில் ஏலம் விடவும், அரிசிக் கடத்தலை முழுமையாக நிறுத்த தமிழ்நாட்டின் எல்லையோர அண்டை மாநிலங்களின் அதிகாரிகளுடன் அடிக்கடி கூட்டங்களை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.