• India
```

QR ஸ்கேன் மூலம் நடக்கும் மோசடி.. மக்களே உஷார்!!

QR Code Scam Exposed

By Dhiviyaraj

Published on:  2025-01-21 23:13:32  |    59

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் UPI அதிகம்  UPIஐப் பயன்படுத்துகிறார்கள்.  QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக PhonePe, Paytm அல்லது Google Pay பயன்படுத்தி பணம் அனுப்ப முடியும். இந்நிலையில் QR குறியீட்டைதவறாக பயன்படுத்தி பல மோசடி நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

QR குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகு, பணம் பெறும் நபரின் பெயரை சரிபார்ப்பது முக்கியம். குறியீடு சரியானதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். Google லென்ஸ் போன்ற பயன்பாடுகள் மூலம் குறியீடு முறையாக இருக்கிறதா என சரிபார்க்கலாம்

வணிகர்களும் மோசடிகளை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம். குறிப்பாக, கடையைத் திறந்தவுடன் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, அவர்களின் பெயர் மற்றும் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும். மாற்றப்பட்ட QR குறியீடுகள் மூலம் மோசடி நடைபெறக்கூடியதால், அவற்றை அவ்வப்போது கண்காணித்து சரிபார்ப்பது அவசியம்.

மோசடிகளைத் தடுக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, மற்றும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இணைந்து பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக புகார் அளிக்க www.cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கலாம். ஆன்லைன் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது முக்கியம்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola