Pregnant Women Govt Schemes - பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற பெயரில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுக்கு மொத்தம் ரூபாய்.6000 நிதி உதவி வழங்கப்படுகிறது.
Pregnant Women Govt Schemes -மத்திய அரசு பெண்களை மையமாக கொண்டு பல திட்டங்களை வெளியிட்டுருக்கிறது. அந்த திட்டங்களை அனைத்து விதமான பெண்களும் பயன்படுத்தி வருகிறார்கள்.மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் வகையில் மாத்ரித்வா சஹ்யோக் யோஜனா என்ற திட்டம் 2010-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர், அந்த திட்டம் 2017-ல் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற பெயரில் மாற்றி அமைக்கப்பட்டது.இந்தத் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுக்கு மொத்தம் ரூபாய்.6000 நிதி உதவி வழங்கப்படுகிறது.மேலும், கர்ப்பிணிப் பெண்கள் சுகாதார பரிசோதனைகளுக்காகவும், மருத்துவச் செலவுகளுக்காகவும் மற்றும் சத்தான உணவுகளை வாங்கவும் இந்த நிதி மிகவும் உதவுகிறது.
இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும், குறிப்பாக பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சமூகங்களில் உள்ள பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இத்திட்டத்தை அனைத்து பெண்களாலும் பெற இயலாது.19 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதன் முதலில் கருவுற்ற பெண்கள் மட்டுமே இந்தத் திட்டத்தை பெற முடியும். இந்தத் திட்டத்தை பெறுவதற்கு அவர்களின் குடும்ப வருமானம் ரூபாய்.8 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்திற்கு தகுதி உள்ள பெண்கள் கருவுற்ற மூன்று மாதத்திற்குள், https://pmmvy.nic.in/ என்ற இணையதளம் மூலம் அல்லது அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து, இந்த நிதி உதவியை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ளலாம்.மேலும், இதற்கு தேவையான ஆவணங்கள்: கருவுற்றதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள்.