Pradhan Mantri Suraksha Bima Yojana Details In Tamil - ஆண்டுக்கு ரூபாய் 20 மட்டும் செலுத்தினால் போதும், ரூபாய் இரண்டு இலட்சம் வரை விபத்துக் காப்பீடு பெறும் வகையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அட்டகாசமான திட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Pradhan Mantri Suraksha Bima Yojana Details In Tamil - பிரதான்
மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விபத்து காப்பீடு திட்டம் ஆகும், இத்திட்டத்தின் கீழ் இணைய நினைப்பவர்கள் ஆண்டுக்கு ரூபாய் 20 வீதம் செலுத்தினால் போதும், அவர்களுக்கு விபத்துக் காப்பீட்டு தொகையாக அதிக பட்சம் ரூபாய் இரண்டு இலட்சம் வரை பெற முடியும்.
சரி, இத்திட்டத்தின் கீழ் யார் யார் இணைய முடியும், என்ன என்ன வரைமுறைகள்?
1) இத்திட்டத்தின் கீழ் இணைய எந்த வரைமுறையும் கிடையாது, தினசரி கூலிகள், கார்பரேட் நிறுவனர்கள், ஊழியர்கள் என யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணைய முடியும்.
2) இணைய நினைப்பவர்களுக்கு ஏதாவது ஒரு வங்கியில் செயல்படுகின்ற வகையில் இருக்கும் ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்க வேண்டும்.
3) ஆதார் மற்றும் பான் கார்டுகள் இத்திட்டத்தின் கீழ் இணைய கட்டாயம் தேவை.
4) 18 வயது முதல் 70 வயது வரை இருக்கும் யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம்.
5) காப்பீட்டு தொகை ரூபாய் 20 நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து தான் எடுத்துக் கொள்ளப்படும்.
6) வங்கிக்
கணக்கு எப்போதும் ஆக்டிவாக இருப்பது அவசியம்.
இத்திட்டத்தினால் என்ன
பயன்?
1) ஏழை எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில், எளிய வகையில் விபத்து காப்பீடு திட்டம் அமைந்து இருக்கிறது.
2) வருடத்திற்கு 20 ரூபாய் செலுத்தினால் போதும் என்பதால் எளிய மக்களிடம் எளிதாக இத்திட்டம் சென்று அடையும்.
3) விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பட்சத்தில் குடும்பத்திற்கு ரூபாய் இரண்டு இலட்சம் வரையில் காப்பீடு வழங்கப்படும்.
4) விபத்தில் இரு கண்களையோ, இரண்டு கால்களையோ, இரண்டு கைகளையோ இழக்கும் பட்சத்தில் ரூபாய் இரண்டு இலட்சம் வரை காப்பீடு வழங்கப்படும்.
5) விபத்தில் சிக்கி ஒரு கண்ணையோ, ஒரு காலையோ, ஒரு கையையோ இழக்கும் பட்சத்தில் ரூபாய் ஒரு இலட்சம் வரை காப்பீடு வழங்கப்படும்.
" முக்கியமான விதிமுறை, விபத்து நடந்து அவர் மருத்துவர்களால் இழப்பை சரி செய்யக்கூடிய பட்சத்தில் இருந்தால் அவர் காப்பீடு தொகையை கோர முடியாது, இருந்தாலும் 20 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப் பட்டு இருக்கும் இந்த காப்பீட்டு தொகை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது “