• India
```

வருடத்திற்கு ரூ 330 மட்டும் செலுத்தினால் ரூ 2 இலட்சம் வரை ஆயுள் காப்பீடு!

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Details Tamil

By Ramesh

Published on:  2024-10-11 01:51:45  |    213

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Details Tamil - வருடத்திற்கு ரூபாய் 330 மட்டும் செலுத்தினால் போதும், இரண்டு இலட்சம் தொகை ஆயுள் காப்பீடாக கிடைக்கும், மத்திய அரசின் இந்த காப்பீடு திட்டத்தில் இணைவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Details Tamil - குறைந்தபட்சம் வருடத்திற்கு ரூபாய் 330 ரூபாய் செலுத்துவதன் மூலம், எதிர்கால இக்கட்டான சூழலில் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பின் பொருட்டு ரூபாய் இரண்டு இலட்சம் வரை வழங்கும், ஆயுள் காப்பீட்டு திட்டம் தான் இந்த பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, உங்களுக்கு பிறகு உங்களின் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு இந்த தொகை பெரிதளவில் உதவிகரமாக இருக்கும்.

 எப்படி இணைவது, எங்கு இணைவது?

அருகில் இருக்கும் தபால் நிலையம் அல்லது அருகில் இருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இரண்டில் ஏதாவது ஒரு அமைப்பிற்கு நேரடியாக சென்று, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் இணைய வேண்டும் என கூறுங்கள், குறைந்த பட்சம் ஒரு ஆதார் கார்டு நகல், ஒரு பான் கார்டு நகல் இது மட்டுமே இத்திட்டத்தில் இணைய போதுமானதாக இருக்கும். இது போக நீங்கள் தபால் நிலையத்தில் இணையும் பட்சத்தில் அங்கு ஒரு சேமிப்பு அக்கவுண்ட் நிச்சயம் இருக்க வேண்டும்.


ஸ்டேட் பாங்கின், எஸ்பிஐ லைஃப்யின் கீழ் இத்திட்டத்தின் இணையும் பட்சத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒரு சேமிப்பு அக்கவுண்ட் நிச்சயம் இருக்க வேண்டும், வயது 18 முதல் 50 வரைக்குள் இருக்க வேண்டியது அவசியம், இத்திட்டத்தின் கீழ் இணைய மருத்துவ பரிசோதனை சான்றிதழ் எல்லாம் எதுவும் தேவைப்படாது, ஆனாலும் யார் பெயரில் காப்பீடு திட்டம் துவங்க இருக்கிறோமோ அவர் நேரடியாக வர வேண்டிய அவசியம் இருக்கும்

நாமினேசன், திட்ட பயன்

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் இணையும் பட்சத்தில், நாமினேசன் செய்வதும் அவசியம் ஆகிறது, சேமிப்பில் இருந்து நேரடியாக ப்ரீமியம் எடுத்துக் கொள்ளும் வசதியும் இத்திட்டத்தில் உண்டு, வரி விலக்கு உண்டு, உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பத்தை பொருளாதார சிக்கலில் இருந்து பாதுகாக்க இத்திட்டம் வழி வகை செய்திடும்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola