Post Office Schemes -மத்திய அரசு அறிமுகப்படுத்திய 'அடல் பென்ஷன் யோஜனா' (Atal Pension Yojana) மூலம், 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 7 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வுக்காலத்தில் மாதம் 5000 ரூபாய் வரை பென்ஷன் பெறலாம்.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய 'அடல் பென்ஷன் யோஜனா' (Atal Pension Yojana) திட்டத்தின் மூலம், 18 முதல் 40 வயது உள்ளவர்கள், தினமும் 7 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வுக்காலத்தில் 5000 ரூபாய் வரை மாதம் பென்ஷன் பெறலாம். இந்த திட்டம், தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் சரியான நிலையில் இல்லாதா நபர்களுக்காக பாதுகாப்பாக செயல்படுகிறது.
மேலும், இந்த திட்டத்தின் மூலம், உறுப்பினர்கள் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால், அவர்களின் வாழ்க்கை துணைக்கு பென்ஷன் வழங்கப்படும். நாமினி என்றால், ஒருவர் இறந்தால் அவருக்கு பென்ஷன் தொகை வழங்கப்படும்.
இந்நிலையில்,இந்த திட்டத்தின் கணக்குகளை பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் திறக்கலாம்.மேலும், கணக்குக்கான ஆதாரமாக ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.