Petrol Diesel Price Latest News -இன்றைய பெட்ரோலின் விளைய பற்றி பார்க்கலாம்.
Petrol Diesel Price Latest News -பொதுவாகவே இந்திய மக்கள் தினமும் இரண்டு பொருள்களின் விலையை உற்று நோக்கி கொண்டு இருப்பார்கள். ஒன்று தங்கம், இன்னொன்று பெட்ரோல், டீசல். பெட்ரோலின் இன்றைய விலை 100 ரூபாயைக் கடந்து இருக்கிறது. ஆனாலும் பலரும் சமூக வலை தளங்களில் நம் இந்திய அரசால் பெட்ரோலை 50 ரூபாய்/லிட்டருக்கு கூட நிர்ணயிக்க முடியும் என கூறி வருகின்றனர். அது சாத்தியமா என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்தியா பொதுவாக ரஷ்யா, ஈராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. ஒரு பேரலுக்கு 70 முதல் 85 டாலர் வரை விலை கொடுத்து இந்தியா வாங்குவதாக தகவல். ஒரு பேரல் என்பது 159 லிட்டர் என வரையறுக்கப்படுகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெயில் இருந்து 70 லிட்டர் பெட்ரோல், 32 லிட்டர் டீசல், 20 லிட்டர் ஜெட் விமான எரிபொருள், 5 லிட்டர் ப்ரப்பேன் எடுக்க முடியும் என ஒரு ஆய்வக அறிக்கை கூறுகிறது.
ஒரு பேரல் கச்சா எண்ணெயை சராசரியாக இந்தியா 80 டாலருக்கு வாங்குகிறது என வைத்துக் கொள்வோம். அதன் இந்திய மதிப்பு தோராயமாக 6715 ரூபாய். தற்போது அதில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பொருள்களின் சந்தை விலையை பார்க்கலாம்.
70 லிட்டர் பெட்ரோல் (102/லி) - 7140 ரூபாய்
32 லிட்டர் டீசல் (94/லி) - 3008 ரூபாய்
20 லிட்டர் ஜெட் விமான எரிபொருள் (100/லி) - 2000 ரூபாய்
5 லிட்டர் ப்ரப்பேன் (1200/KG) = 4800 ரூபாய் ( தோராயமாக)
இதர பொருள்கள் (பியூட்டேன், அஸ்பால்ட், சல்பர்) = 5000 ரூபாய் (தோராயமாக)
பேரல் 6175 ரூபாய்க்கு வாங்கப்படும் கச்சா எண்ணெய் இந்தியாவின் சந்தையில் 21,948 ரூபாய் ஆகிறது. சுத்திகரிப்பு, போக்குவரத்து செலவு எல்லாம் கருத்தில் கொண்டு ஒரு பேரல் 7100 என வைத்தாலும் கூட, அசல் போக இரண்டு மடங்கு இலாபம் என்பது அரசின் கையில் நிற்கிறது.
“ இந்த இரு மடங்கு இலாபத்தை அரசு குறைத்துக் கொள்ள முற்பட்டால், பெட்ரோல் லிட்டர் ரூபாய் 50-க்கு சாத்தியப்படாவிட்டாலும் கூட, 65 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பதற்கு நிச்சயம் சாத்தியப்படும் “