Papaya Health Benefits Tamil - பப்பாளி பழத்தை எடுத்துக்கொள்ளும் போது அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்ன என்பது குறித்தும் அதன் மருத்துவ பயன்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாகவே முன்னோர்கள் சொல்வார்கள் உணவே மருந்து என்று, ஒரு காலத்தில் நாம் அன்று சாப்பிட்ட அனைத்து உணவுகள், பழங்கள் எல்லாமே நம் உடல் நல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அமைந்து இருக்கிறது, ஆனால் இன்றைய உணவு நாகரீகம் என்பது உடலுக்கே விஷமாக மாறி பல்வேறு மாற்றங்களை விதைத்து சந்ததிகளையே நோயாளிகளாக மாற்றிக் கொண்டு இருக்கிறது.
முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பப்பாளி மரம் இருக்கும், அதில் வாரத்தில் ஒரு காய் காய்க்கும், அதை வீடே சேர்ந்து உண்பார்கள், அந்த பப்பாளியில் அவ்வளவு சத்து இருக்கும், பப்பாளி ஒரு ஆகச்சிறந்த சத்தான பழமாகும், மாலையில் தினசரி ஒரு துண்டு பப்பாளி சாப்பிட்டு வந்தால் அது செரிமானத்திற்கு உதவுகிறது: பப்பாளியில் பப்பைன் என்ற நொதி உள்ளது, இது புரதத்தை உடைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
பொதுவாகவே பப்பாளி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, பப்பாளியில் நிறைந்துள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, இதய ஆரோக்கியத்திற்கும் பப்பாளி உகந்ததாக இருக்கிறது, பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.பப்பாளியில் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன பப்பாளியில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம், இது எடை இழப்புக்கு உதவுகிறது.
" ஒரு சில மருத்துவ ஆய்வுகள் பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புற்றுநோயை கூட தடுக்க உதவும் என்று கூறுகின்றன, டெங்கு காய்ச்சலுக்கும் கூட பப்பாளி இலைகள் கசாயமாக கொடுக்கப்படுகின்றன, அந்த வகையில் பப்பாளி ஒரு ஆகச்சிறந்த மருத்துவக் கனி "