• India
```

PAN கார்ட்..பெயர், முகவரி, புகைப்படம் மாற்றம் செய்வது எப்படி?ஆதார் அட்டையுடன் இணைக்காவிட்டால் அபராதமா!??

PAN Card Uses In Tamil | Business News In Tamil

PAN Card Uses In Tamil -பல்வேறு பொருளாதார ஒழுங்கு முறையுடன் இணங்குவதற்கு பான் கார்டு அவசியமாக கருதப்படுகிறது. ஒருமுறை உங்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு விட்டால், அதில் நீங்கள் எந்த ஒரு மாற்றமும் செய்யாத போது மற்றும் அது கேன்சல் ஆகாமலும் அதனை நீங்கள் சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்காமல் இருக்கும் பட்சத்தில் அது உங்கள் வாழ்நாள் முழுவதும் செல்லுபடி ஆகும்.

PAN Card Uses In Tamil  -பான் கார்டு வாங்க நினைக்கும் ஒருவர் ஆன்லைன் மூலமாகவோ அல்லது NSDL அல்லது UTIITSL போன்ற நியமிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமாக ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பான் கார்டு (PAN card) என்றால் என்ன மற்றும் அதன் முக்கியத்துவம் யாது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஒருவேளை பான் கார்டு பற்றிய எந்த ஒரு விவரமும் உங்களுக்கு தெரியாது என்றால் அதனை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். பான் கார்டு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் இப்போது காணலாம்.

PAN கார்டு

PAN (Permanent Account Number) என்பது வருமான வரி துறையால் வழங்கப்படும் 10 இலக்க அடையாள எண்ணாகும். இது வரி செலுத்துபவர்களின் பொருளாதார பரிவர்த்தனைகளை கண்காணிக்க உதவுகிறது.

வருமான வரி தாக்கலுக்கு முக்கியம்

வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் PAN கார்டு அவசியமாக இருக்க வேண்டும். மேலும், முக்கிய பொருளாதார பரிவர்த்தனைகளுக்கும் இது தேவையானதாக இருக்கும்.

PAN கார்டு விண்ணப்பிக்கும் முறை

PAN கார்டு ஆன்லைன் மூலமாகவோ அல்லது NSDL/UTIITSL போன்ற ஏஜென்சிகளின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.மேலும், அடையாளம், முகவரி, பிறப்பு சான்றிதழ் ஆகியவை இதற்க்கு தேவைப்படும்.

மேலும், பான் கார்டு என்பது பெரும்பாலும் பல்வேறு சேவைகளுக்கான செல்லுபடி ஆகக்கூடிய அடையாள சான்றிதழாக செயல்பட்டு வருகிறது.இதனால், வங்கி கணக்குகள் திறப்பது முதல் லோன்களுக்கு விண்ணப்பிப்பது வரை பல்வேறு விஷயங்களுக்கு நீங்கள் பான் கார்டை உபயோகித்து பயன்பெறலாம்.


பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைத்தல் ஒருவேளை உங்களிடம் பான் கார்டு இருந்தால் விதிகளின்படி கட்டாயமாக நீங்கள் அதனை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தவறினால் அபராதங்கள் விதிக்கப்படும்.

பான் கார்டில் பான் நம்பர், கார்டு ஹோல்டர் பெயர், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் போன்ற விவரங்கள் இருக்கும்.மேலும், அது மட்டுமல்லாமல் சரிபார்ப்பு காரணங்களுக்காக அதில் QR கோட் கொடுக்கப்பட்டிருக்கும்.

பான் கார்டில் உள்ள பெயர், முகவரி அல்லது புகைப்படம் போன்ற விவரங்களை ஒருவர் அப்டேட் செய்ய நினைத்தால் அதற்கு சம்பந்தப்பட்ட படிவங்கள் மற்றும் டாக்குமெண்ட்களை கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

உங்களுடைய பான் கார்டை நீங்கள் தொலைத்து விட்டாலோ அல்லது உடைத்துவிட்டாலோ அதனை நீங்கள் மீண்டும் அச்சிடுவதற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது உங்களுடைய தற்போதைய பான் கார்டு எண்ணை பயன்படுத்தி நீங்கள் இதற்கு முன்பு பான் கார்டு வாங்கிய அதே ஏஜென்சிகள் மூலமாகவே டூப்ளிகேட் கார்டை பெற்று கொள்ளலாம்.


Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola