Online Shopping Scams -மத்திய அரசு ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் வாடிக்கையாளர் தரவுகளை கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது. Blinkit, Zepto, Instamart போன்ற தளங்களில் இருந்து வாடிக்கையாளர் தகவல்கள் கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) கணக்கிடும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
Online Shopping Scams -இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துள்ள நிலையில், Blinkit, Zepto, Instamart போன்ற செயலிகளை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங் மூலம் மோசடிகள், குறிப்பாக தனிநபர் தகவல்கள் திருடப்படுவதற்கான புகார்கள் உருவாகியுள்ளன.
இந்த சூழலில், மத்திய அரசு புதிய முயற்சியாக வாடிக்கையாளர்களின் தரவுகளை கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த தகவல்களை ஆன்லைன் விற்பனையாளர் நிறுவனங்களிடமிருந்து பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) கணக்கிடவும், ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் நுகர்வு மற்றும் பொருளாதார மாற்றங்களை புரிந்துகொள்ளவும் அரசுக்கு உதவும்.
கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் பிரிவில் ஏற்பட்ட பெரும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இந்த தகவல்களை தேசிய புள்ளிவிவர கமிட்டியின் முன் வைக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், Quick Commerce தளங்களில் நடைபெறும் மளிகை விற்பனையில், 2021-23 ஆண்டுகளில் 230 சதவிகித வளர்ச்சி காணப்பட்டுள்ளது, இதனால் மொத்த உள்நாட்டு மளிகை விற்பனையில் இப்பகுதி 5-6% பங்கைக் கொண்டுள்ளது.