Online GST Registration Process Tamil - எந்தவொரு தொழிலுக்கும் தற்போது ஜிஎஸ்டி அவசியம் ஆவதால், அதை எப்படி நீங்களாகவே ரிஜிஸ்டர் செய்து பெறுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Online GST Registration Process Tamil - ஜிஎஸ்டி என்பது என்ன, எப்படி பதிவு செய்வது, என்ன என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் ஜிஎஸ்டி என்பது என்ன?
சரக்கு மற்றும் சேவை வரி (Goods And Service Tax) என்பது உற்பத்தி பொருள்கள், விற்பனை பொருள்களின் மீது மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விதிக்கப்படும் வரி என்பது ஒற்றை வரியாக மாற்றப்பட்டு விதிக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும், இது ஒரு மறைமுக வரி, இது பொருள்களின் மீது 0%, 5%, 12%, 18%, 28% ஆகும். விலை மதிப்பற்ற கற்கள் மீது 0.25% சிறப்பு விகிதமும், வடிவமற்ற அரைகுறைவான கற்கள் மற்றும் தங்கம் மீதும் 3% என்ற விகிதத்திலும் இந்தியா முழுக்க விதிக்கப்படுகின்றன.
சரி அனைத்து நிறுவனங்களும் ஜிஎஸ்டி எடுக்க வேண்டுமா?
அனைத்து சிறு குறு நிறுவனங்களும் ஜிஎஸ்டி எடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை, உங்களது வருடாந்திர வணிகத்தின் அளவு 40 இலட்சத்திற்குள் இருக்குமானால் ஜிஎஸ்டி அவசியம் இல்லை, 40 இலட்சத்தை தாண்டும் பட்சத்தில் ஜிஎஸ்டி அவசியம், ஒரு சில மாநிலங்களில் வணிகத்தின் அளவு 20 இலட்சங்களாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் உங்கள் உற்பத்தி பொருளை ஈ கமெர்ஸ் மூலம் விற்க நினைக்கிறீர்கள் என்றால் ஜிஎஸ்டி நிச்சயம் அவசியம்.
ஜிஎஸ்டி ரிஜிஸ்ட்ரேசனுக்கு முன்பு கையில் இருக்க வேண்டிய ஆவணங்கள்
1) 100 KB மதிப்பிற்குள் உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2) உங்களுடைய கடை சொந்தமானது என்றால் சொந்த கடைக்கான ஆவணம்
3) உங்களது கடை வாடகை கடை எனில் வாடகைக்கான ஒப்பந்தம், ஆன்லைனில் எடுக்கப்பட்ட மின்சார பில்
4) ஆதார் கார்டு, பான் கார்டு PDF வடிவில்
5) ஆவணங்கள் அனைத்தும் PDF வடிவில் 1 MB க்குள் இருப்பது அவசியம்
6) இது போக நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் மற்றும் ஆக்டிவ் நிலையில் இருக்கும் ஈ மெயில், புதிய ஈ மெயிலாக இருந்தால் இன்னும் பெட்டர்
7) எப்போதும் பயன்படுத்தும் வகையில் ஒரு மொபைல் நம்பர் அவசியம்
8) முக்கியமாக ஒரு பேங்க் அக்கவுன்ட் இருப்பது மிக மிக முக்கியம்
பதிவு செய்வது எப்படி?
1) https://reg.gst.gov.in/registration/ முதலில் இந்த லிங்கை க்ளிக் செய்து நியூ ரிஜிஸ்ட்ரேசன் ஆப்சனை க்ளிக் செய்து கொள்ளவும்
2) Iam A என கேட்கப்பட்டு இருக்கும் காலத்தில் Tax Payer என உள்ளிட்டு, மீதி இருக்கும் தகவல்களை உள்ளிடவும்
3) ஈ மெயில் மற்றும் மொபைலை உள்ளிட்டதும் இரண்டிற்கும் ஒரு கடவுச்சொல் வரும் அதை உள்ளிட்டதும், TRN (Temporary Registration Number) ஒன்று கிரியேட் ஆகும், அதை பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
4) பின்னர் மீண்டும் https://reg.gst.gov.in/registration/ இந்த லிங்கிற்குள் சென்று இந்த முறை Temporary Registration Number என்ற ஆப்சனை க்ளிக் செய்து உள் நுழைய வேண்டும்
5) மறுபடியும் மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் வரும் அதை உள்ளிட்டதும் உங்கள் நிறுவனம் குறித்த தகவல்கள் அனைத்தையும் கேட்கும்
6) நார்மலான தகவல்களாக தான் இருக்கும், முகவரி, உரிமையாளர் பெயர், உரிமையாளரின் ஆதார், பான் கார்டு, ஒற்றை உரிமையாளரா, நிறுவனத்தின் முகவரி, நிறுவனரின் புகைப்படம், முகவரிக்கான ஒரு ஆதார ஆவணம், உங்கள் அருகாமையில் இருக்கும் ஜிஎஸ்டி ஆபிஸ் உள்ளிட்டவைகளை எல்லாம் உள்ளிட்டு விட்டு, 100 சதவிகிதம் எல்லாவற்றையும் நிரப்பி இருக்கிறீர்களா என பார்த்துக் கொள்ளுங்கள்
7) முடிவு கட்டத்தில் Submit With DSC, Submit With EVC என்ற இரு ஆப்சன்களில் Submit With EVC க்ளிக் செய்து, ஒரு கடவுச்சொல் வரும் அதை மீண்டு உள்ளிட்டால் உங்களது அப்ளிகேசன் நிறைவடைந்து விடும். வெரிபிகேசன் எல்லாம் முடிந்து 7 முதல் 30 நாட்களுக்குள், உங்களது ஜிஎஸ்டி ரிஜிஸ்ட்ரேசன் லைசென்ஸை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.