Old Pension News Today -தமிழ்நாட்டில் CPS திட்டம் ஒழிக்கப்பட்டு பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் வரை அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Old Pension News Today -தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) ஒழிக்கப்பட்டு பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் தொடரும் என்று CPS ஒழிப்பு இயக்கம் உறுதியளித்துள்ளது.
மேலும், CPS திட்டம் அரசு ஊழியர்களுக்கு எந்த நன்மையும் வழங்கவில்லை என்று கூறி, ஆறரை லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், இந்த திட்டத்தை ரத்து செய்யவும், பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டு வரவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 38,000 குடும்பங்களின் இன்றைய அவலநிலை, CPS திட்டத்தில் பணிபுரிந்து பணியிடை மரணமடைந்த 7723 குடும்பங்களின் துயரநிலை, இந்தியாவிலேயே ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்தப் பயனும் இல்லாத தமிழ்நாட்டு அரசு ஊழி்யர்கள், ஆசிரியர்களின் அவலநிலை, CPS திட்டத்தின் பாதிப்புகள், CPS திட்டத்தை ரத்துசெய்திட இருக்கும் வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சமீபத்தில் CPS ஒழிப்பு இயக்கம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளருடன் சந்தித்து, CPS-இன் பாதிப்புகள் மற்றும் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசியுள்ளனர்.