Old 2000 Rupee Note Exchange -நீங்கள் கிழிந்த அல்லது சிதைந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவரா? அவற்றை எளிதில் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு.
Old 2000 Rupee Note Exchange -அன்று போல், இன்றும் பலர் கிழிந்த மற்றும் சிதைந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போம், ஆனால் அவற்றை கடைகளிலும் வியாபாரிகளிடமும் பயன்படுத்த முடிவதில்லை.இதனால், அவற்றை நீண்ட நாள் வைத்து,சேளவு செய்ய முடியாமல் இறுதியில் எந்த வித பயனும் இல்லாமல் தூக்கி எறிகிறோம்.ஆனால், தற்பொழுது இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து எளிதில் புதிய நோட்டுகளைப் பெறலாம்.
ரிசர்வ் வங்கி கிழிந்த நோட்டுகளை மாற்ற வங்கிகள் பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, கிழிந்த அல்லது சிதைந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால், அவற்றை நீங்கள் வங்கிகளிலும் அல்லது ரிசர்வ் வங்கி கிளைகளிலும் கொடுத்து புதிய நோட்டுகளைப் பெற்று கொள்ளாலாம். நோட்டின் சிதைவு நிலைக்கு ஏற்ப, வங்கிகள் சில கட்டணத்தை திரும்பக் கொடுக்கும்.
ஒரு நபர், ஒரு முறை 20 நோட்டுகள் வரை மட்டுமே வங்கிகளில் மாற்ற முடியும், அதனுடன் கூடிய அதிகபட்ச மதிப்பு ரூ.5,000 ஆக இருக்க வேண்டும். ரூ.5,000க்கு கீழ் இருக்கும் நோட்டுகள் உடனடியாக மாற்றப்பட்டு புதிய நோட்டுகள் வழங்கப்படும். அதிக அளவு நோட்டுகளுக்கு பணம் கிடைக்க வங்கிகள் அவற்றை ஆய்வு செய்து, பின்னர் உங்கள் பணத்தை நேரில் கையில் கொடுக்காமல் வங்கி கணக்கில் வரவு செய்து விடுகின்றன.
அனைத்து வகையான கிழிந்த, அழுக்கான அல்லது சிதைந்த நோட்டுகளையும் வங்கிகள் மாற்றிக் கொள்கின்றன. ஆனால், பெரும்பாலான பகுதிகள் கிழிந்திருந்தால், அவற்றை மாற்ற முடியாது. நோட்டுகள் சேதப்படுத்தப்பட்டதா என்று வங்கிகள் ஆய்வு செய்தால், மாற்ற மறுக்க வாய்ப்புள்ளது.
வங்கிகள் உங்கள் நோட்டுகளை ஏற்க மறுத்தால், ரிசர்வ் வங்கி கிளைகளில் சென்று மாற்றலாம். 1 முதல் 20 ரூபாய் வரையிலான நோட்டுகள் முழு மதிப்புடன் மாற்றப்படும், ஆனால், 50 முதல் 500 ரூபாய் வரை மோசமான நிலையில் இருந்தால், வங்கிகள் மாற்றுவதற்கு அதற்க்கு தகுந்ததை போல் சிறிய கட்டணம் வசூலிக்கும்.