The Health Benefits of Nithya Kalyani - நித்திய கல்யாணி செடியில் இருந்து பெறப்படும் பூக்கள் இலைகள் எந்த வகையில் பல மருத்துவ பயன்களை தருகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
நம் முன்னோர்கள் இந்த அல்லோபதி எல்லாம் வருவதற்கு முன்பாகவே இயற்கையாகவே கிடைக்கும் செடி கொடி தாவரங்களையே மருந்துகளாக பயன்படுத்தி வந்தனர், பாம்பு கடிக்கு கூட பச்சிலையை அரைத்து கட்டி மருத்துவம் பார்த்து வந்தவர்கள், அந்த வகையில் ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு சிறப்பான இடம் பிடித்து இருக்கும் நித்திய கல்யாணி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நித்திய கல்யாணி (Catharanthus roseus) ஒரு ஆகச்சிறந்த மருத்துவ மூலிகையாகும். நித்திய கல்யாணியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வின்க்ரிஸ்டின் (vincristine) மற்றும் வின்பிளாஸ்டின் (vinblastine) போன்ற வேதிப்பொருட்கள் சில வகையான புற்றுநோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. நித்திய கல்யாணி இலைகளை உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோய்கள் கட்டுக்குள் வரும்.
மேலும் நித்திய கல்யாணியை வாரத்திற்கு ஒருமுறை எடுத்து வந்தால் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய்களை கட்டுக்குள் கொண்டு வரும் பணிகளையும் செய்கிறது, நித்திய கல்யாணி பூவை அரைத்து பொடியாக செய்து, டீயோடு சேர்ந்து பருகி வந்தால் மன அழுத்தத்தை குறைத்து ஒருவரை அழுத்தத்தில் இருந்தும், களைப்பில் இருந்தும் உடனடியாக விடுபட செய்யும்.
நித்திய கல்யாணி செடியின் பூ மற்றும் இலைகளைக் கொண்டு கஷாயம் தயாரித்து, கொஞ்சம் தேன் கலந்து குடித்தால், ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சுத் திணறல், இருமல் போன்றவைகள் குறையும், நித்திய கல்யாணியின் இலைகள் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை அரைத்து பேஸ்ட் செய்து காயங்களின் மேல் தடவினால் காயங்கள் விரைவில் குணமாகும்.
" செடியின் வேரில் இருந்து தண்டு, இலை, பூ என எல்லாமே மருத்துவ பலன்கள் மிக்கதாக அறியப்படுவதால் நித்திய கல்யாணி மூலிகைகளின் அரசியாக பார்க்கப்படுகிறது "