Nima Company News Today -சாதாரண குடும்பத்தில் பிறந்த கர்சன்பாய் படேலின் வாழ்க்கையை பற்றி பார்க்கலாம்.ரூ.15,000 கடன் பெற்று "நிர்மா" என்ற பெயரில் சலவைத் தூளை தயாரித்து, இன்று 7,000 கோடி ரூபாய் வருவாயுள்ள முன்னணி நிறுவனமாக இருக்கிறது.
சாதாரண குடும்பத்தில் இருந்து உருவான உயர்ந்த வெற்றிக் கதைகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. பிரபல சலவைத் தூள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் நிறுவனமான நிர்மா லிமிடெட்டின் நிறுவனர் கர்சன்பாய் படேலுக்கும் இப்படி ஒரு கதை இருந்தது.
எளிய தொடக்கம், கர்சன்பாய் படேல் 1945 ஆம் ஆண்டு குஜராத்தின் ருப்பூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவர் வாழ்ந்த வாழ்க்கை எளிமையாகவும் சாதாரணமாகவும் இருந்தது. வேதியியலில் பட்டம் பெற்ற பிறகு, அரசு ஆய்வகத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றினார். நிலையான வேலை இருந்தபோதிலும், தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருந்தது.
சந்தையில் குறைந்த விலை சலவைத் தூளுக்கான தேவை அதிகமுள்ளது என்பதை கவனித்த அவர், அதிகமான மக்களும் வாங்கக்கூடிய சலவைத் தூளை உருவாக்க வேண்டும் என முடிவுசெய்தார். ரூ.15,000 கடன் பெற்று, எளிதில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, தனது வீட்டின் பின்புறத்தில் "நிர்மா" என்ற பெயரில் சலவைத் தூளை தயாரிக்கத் தொடங்கினார். பின்னர், தனது சைக்கிளில் வீடு வீடாகச் சென்று சலவைத் தூளை விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
ஒரு கிலோவுக்கு ரூ.13 என்ற குறைந்த விலையில் கிடைத்ததால், நிர்மா மக்களிடையே விரைவாக பிரபலமானது. உற்பத்தியை அதிகரிக்க, அவர் ஒரு சிறிய உற்பத்தி மொனையை வாடகைக்கு எடுத்து தொழிலாளர்களை பணியில் அமர்த்தினார். இதன் பின்னர், நிர்மாவின் வெற்றிக் கதை மேலும் வளர்ந்து, இந்தியா முழுவதும் பிரபலமானது. இன்று, நிர்மா சுமார் 18,000 பேரை பணியில் அமர்த்தும் முன்னணி நிறுவனமாக உள்ளது.
சோப்பு, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட சுகாதார பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தியிலும் நிறுவனம் தன்னை விரிவுபடுத்தியுள்ளது. ரூ.7,000 கோடி வருடாந்திர வருவாயைக் கொண்ட நிர்மா குழுமம், ரூ.23,000 கோடிக்கு மேற்பட்ட மொத்த வருவாயைக் கொண்ட பிரபலமான நிறுவனமாக மாறியிருக்கிறது.