இந்த தொகுப்பில் புதியதாக திருமணம் ஆனவர்கள் எப்படி தங்களது பெயரை நீக்கம் செய்து விட்டு, புதிய ஸ்மார்ட் கார்டிற்கு விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
சரி முதலில் பெயர் நீக்கம் குறித்து பார்க்கலாம்!
1) முதலில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புதுறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் செல்ல வேண்டும் - https://www.tnpds.gov.in
2) முகப்பு பக்கம் வந்ததும், அதில் மின்னனு அட்டை தொடர்பான சேவைகள் என்றதொரு பிரிவில், குடும்ப உறுப்பினர் நீக்க என்றதொரு ஆப்சன் இருக்கும் அதை க்ளிக் செய்யவும்.
3) நீங்கள் எந்த கார்டில் இருந்து உங்கள் பெயரை நீக்க நினைக்கிறீர்களோ, அந்த கார்டில் ரிஜிஸ்டர் செய்த நம்பர் கேட்கும், கொடுத்ததும் ஒரு ஓடிபி எண் வரும், அதை உள்ளிட்டதும் நீக்கம் செய்யும் பகுதிக்கு சென்று விடும்.
4) பெயர், பெயர் நீக்கத்திற்கான காரணம் உள்ளிட்டவைகளை கொடுத்து விட்டு, கேட்கும் ஆவணங்களில் திருமண சான்றிதழ் கொடுப்பது சிறந்தது, அது உடனடியாக நீக்கம் செய்வதற்கு வழி வகை செய்யும்.
5) அனைத்தையும் நிரப்பி விட்டு, ஆவணங்களை அப்லோடு செய்து விட்டு, அப்ளிகேசனை பதிவு செய்ய வேண்டும்.
6) குறைந்தபட்சம் 15-20 நாட்களுக்குள் உங்களது பெயர், கார்டில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு விடும்.
7) கணவர், மனைவி இருவருக்கும் தனி தனியாக பெயர் நீக்கத்திற்கு பதிவு செய்ய வேண்டும்.
சரி, பெயர் நீக்கம் செய்யப்பட்டதும் புது கார்டுக்கு பதிவு செய்வது எப்படி?
1) முதலில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புதுறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் செல்ல வேண்டும் - https://www.tnpds.gov.in
2) மின்னனு அட்டை சேவைகள் என்ற பிரிவில் புதிய மின்னனு அட்டை விண்ணப்பிக்க என்ற ஆப்சனை க்ளிக் ஸெய்ய வேண்டும்.
3) பின்னர் அந்த பக்கத்தில் கேட்கும் தகவல்களை எல்லாம் உள்ளிட்டு, குடும்ப உறுப்பினராக யாரை தெரிவு செய்கிறீர்களோ அவர்களது புகைப்படத்தையும் உள்ளிட வேண்டும்.
4) பெயர் நீக்கம் செய்ததுமே நீங்கள் தனியாக வேறு ஒரு வீட்டில் இருக்கிறீர்கள் என்றால், அந்த வீட்டின் முகவரிக்கு உங்கள் ஆதாரை மாற்றிக் கொள்வது அவசியம் ஆகிறது.
5) அது மட்டும் அல்லாமல் அந்த வீட்டின் நம்பரில் ஒரு கேஸ் கனெக்சன் எடுத்துக் கொள்வதும் அவசியம்.
6) வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்த சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்
7) பின்னர் குடியிருப்பு சான்று ஆவணத்திற்காக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கேஸ் இணைப்பு சான்று உள்ளிட்டவைகளுள் ஏதாவது ஒன்றை கொடுக்கவும்.
8) பின்னர் கேஸ் இணைப்பு தகவல்களையும் தனியாக உள்ளிட்டு, பதிவு செய்து கொள்ளலாம்
9) அலுவலரின் ஆய்வுக்கு சீக்கிரம் உட்பட்டு விட்டால் ஒரு 2 மாதத்திற்குள் ஸ்மார்ட் கார்டை பெற்று விடலாம்.
10) ஆய்வுக்கு வரும் போது நீங்கள் தனி வீட்டில் இருக்க வேண்டும், முகவரி சான்றில் கொடுத்த அந்த கதவு எண்ணில் இருக்க வேண்டும், அந்த கதவு எண்ணில் அந்த வீட்டில் கேஸ் கனெக்சன் இருக்க வேண்டும்.
11) அவ்வாறாக இருக்கும் பட்சத்தில் ஆய்வாளர் உங்களது ஸ்மார்ட் கார்டுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வார்.
12) விண்ணப்பம் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு புதிய ஸ்மார்ட் கார்டு வருவதற்கு 1-3 மாதங்கள் வரை ஆகும்.