New Educational Loan Scheme For Domestic Studies 2024 - மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வருடத்திற்கு 3 சதவிகிதம் வட்டி மானியத்துடன், ரூபாய் 10 இலட்சம் வரை கல்விக்கடன் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
New Educational Loan Scheme For Domestic Studies 2024 - ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த புதிய கல்விக்கடன் திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் எந்த பெரிய கல்வி நிறுவனங்களிலும், மேல் படிப்பு தொடர விழையும் மாணவர்கள் பயன்பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் வரை மாணவர்கள் கல்விக் கடன் பெற முடியும், இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் கல்விக்கடனுக்கு வருடத்திற்கு வட்டியில் 3 சதவிகிதம் வரை மானியமும் அரசு வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் இணைய நினைக்கும் மாணவர்களுக்கு 7.5 இலட்சம் வரை பிணையம் இல்லாக் கடனை அரசு வழங்குகிறது. நீங்கள் படிக்க நினைக்கும் கல்லூரியில் இருந்து ஒரு போனஃபைட் மட்டும் வாங்கி வங்கியில் சமர்ப்பித்தால் உங்கள் படிப்பிற்கான முழு செலவையும் நீங்கள் லோனுக்கு பதிவு செய்து இருக்கும் வங்கிகளின் மூலம் பெற முடியும்.
7.5 இலட்சங்களுக்கு மேல் நீங்கள் பெறும் கல்விக்கடனுக்கு பிணையம் தேவைப்படும், அது உங்களது தந்தையாகவோ, தாயாகவோ, காப்பாளராகவோ இருக்கலாம். அதுவும் 7.5 இலட்சங்களுக்கு மேல் பெறப்படும் கடன் தொகைக்கு மட்டுமே பிணையம், நீங்கள் தற்போது 10 இலட்சம் கடன் பெற நினைக்கிறீர்கள் என்றால் 2.5 இலட்சத்திற்கு மட்டுமே பிணையம் தேவைப்படும், 7.5 இலட்சங்கள் பிணையம் இல்லாமல் வழங்கப்படும்.
கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் இன்னும் வங்கிகளில் செயல்படுத்தப் படவில்லை, அக்டோபர் கடைசியில் அல்லது நவம்பரில் இத்திட்டம் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.