Nammai Kakkum 48 Scheme Details - தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் நம்மை காக்கும் 48 திட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சாலை பாதுகாப்பை உறுதி படுத்தவும், சாலை விபத்துக்களை குறைப்பதற்கும், சாலை உயிரிழப்புகளை தடுப்பதற்கும், தமிழக அரசு ஆனது கடந்த 2021 ஆம் ஆண்டு, கொண்டு வந்த திட்டம் தான், இந்த 'நம்மை காக்கும் 48' என்ற திட்டம், உயிர் காக்கும் இத்திட்டம் ஆனது தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சரி இத்திட்டத்தின் விரிவாக்கம் என்ன என்றால், சாலை விபத்தில் சிக்கிய ஒருவர் நிலைகுலைந்து இருக்கும் போது எங்கோ தூரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையே தேடாமல், அவர் உயிர்காக்கும் பொருட்டு, அருகில் என்ன மருத்துவமனை இருந்தாலும் அங்கு அனுமதிக்கப்பட்டு, முதல் 48 மணி நேரம் எல்லா அவசர சிகிச்சைகளையும் இலவசமாக எடுத்துக் கொள்ள முடியும்.
அது தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் சரி, அரசு அந்த செலவை ஏற்றுக் கொள்ளும், இத்திட்டத்தின் கீழ் அந்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒருவர் 1 இலட்சம் வரையிலான சிகிச்சைகளை எந்த வித பணமும் செலுத்தாமல் பெற்றுக் கொள்ள முடியும், அதற்கு பின் அவர் சுயநினைவோடு இருந்தால் விருப்பத்தின் பேரில் வேறு மருத்துவமனைக்கு கூட மாறிக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் உயிர்காக்கும் 81 சிகிச்சைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன, இத்திட்டத்தின் கீழ் பிறமாநிலத்தவர், வெளிநாட்டவர்கள் கூட தமிழகத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் விபத்திற்கான அவசர சிகிச்சை பெற முடியும், கடந்த 2021 யில் இருந்து இத்திட்டம் விபத்துக்களால் சிக்கிய பலரின் உயிரை மீட்டு இருப்பதாக தகவல், இத்திட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரமும் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.