Mutual Funds In Tamil- பொதுவாக அனைவரும் விளம்பரங்கள் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் என்பதை கேள்வி பட்டு இருப்போம், ஆனால் அது குறித்த சரியான புரிதல் இருக்காது, நீங்கள் இந்த தொகுப்பை முழுவது படிக்கும் பட்சத்தில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த புரிதல் விளங்கும்.
Mutual Funds In Tamil - நடப்பு காலத்தில் யாரும் சேமிப்பிற்கு ரிட்டன்ஸ் வர 10 வருடங்கள், 15 வருடங்கள் எல்லாம் காத்திருக்க துணிவதில்லை, உடனடியாக இலட்சங்கள் வேண்டும், உடனடியாக கோடிகள், இன்றே டபுளாக வேண்டும் என யோசிக்கும் அளவிற்கு காலம் வளர்ந்து விட்டது, அவ்வாறாக ஒரே நாளில் முதலீடு டபுள் ஆகுமா, நல்ல இலாபம் கிடைக்குமா, அப்படி எல்லாம் செய்ய முடியுமா என்றால் முடியும் தான், ஆனால் ரிஸ்க்.
தற்போதெல்லாம் பெரும்பாலானோருக்கு பங்கு சந்தை குறித்த விழிப்புணர்வு கிடைத்து இருக்கிறது, எதிலாவது முதலீடு செய்து பெரிய இலாபம் பார்க்க வேண்டும் என சிந்திக்கின்றனர், இதற்காகவே ஒரு சிலர் ஒவ்வொரு நிமிடமும் பங்குச்சந்தை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர், ஒவ்வொரு புள்ளியிலும் ஒவ்வொரு வினாடியிலும் என்ன நடக்கிறது என பார்த்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் ஒரு சிலருக்கு பங்குச்சந்தை குறித்து மேலோட்டமாக தெரியும், ஆனால் முதலீடுகளை குறித்த ஆராய்ச்சிக்கு எல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்காது, இன்னும் சிலருக்கு கையில் ஓய்வூதியம் இருக்கும், இல்லையேல் எதிலாவது மிகப்பெரிய இலாபம் கிட்டி இருக்கும், ஆனால் பங்குச்சந்தையில் எப்படி முதலீடு செய்து இலாபம் பார்ப்பது என தெரியாமல் இருக்கும்.
இவ்வாறானவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தையில் கை தேர்ந்த ஒரு சில நிறுவனங்கள், அவர்களுக்கென்று தனியாக ஒரு மியூச்சிவல் ஃபண்ட் நிறுவனத்தை உருவாக்கி, முதலீடுகளை இவ்வாறானவர்களிடம் இருந்து பெறுகின்றனர், பின்னர் அந்த முதலீடுகளை நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை, ஆவணங்கள், அரசு பாண்டுகள் என பல தரப்பட்டவைகளில் முதலீடு செய்கின்றனர்.
இவ்வாறாக கிடைக்கும் இலாபத்தை முதலீட்டு தாரர்களிடம் பகிர்ந்து அளிக்கின்றனர், அதே சமயத்தில் நீங்கள் பணத்தை இழக்கும் பட்சத்தில் நீங்கள் முதலீடு செய்த மியூச்சிவல் ஃபண்ட் நிறுவனம் அதற்கு பொறுப்பாகாது, ஒரே சமயத்தில் நீங்கள் கோடீஸ்வரராகவோ, இலட்சாதிபதியாகவோ ஆகவும் முடியும், அதே சமயத்தில் ஜீரோவிற்கும் செல்ல முடியும், இது தான் அதில் இருக்கும் ரிஸ்க்.
சரி, அப்படி என்றால் பங்குச்சந்தை நிபுணர்களிடம் முதலீடு செய்யலாமே, ஏன் மியூச்சுவல் ஃபண்ட்?
Mutual Funds Details In Tamil -பங்குச்சந்தை நிபுணர்கள் என்னும் போது அவர்கள் என்ன என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் வெளிப்படையாக கண்காணிக்க முடியாது, அவர்களுடைய சரியான திறன் என்ன என்பது உங்களுக்கு புலப்படாது, வெறுமனையே வாய் வார்த்தைகள் தான் அவர்களிடம் இருக்கும், ஆனால் மியூச்சுவல் பண்டில் இங்கு சரியான மியூச்சுவல் ஃபண்ட் எது என்பதை உங்களால் கண்காணிக்க முடியும்,
வேறு எந்த ஆராய்ச்சியும் உட்கார்ந்து செய்ய தேவை இல்லை. முதலீடு மட்டும் செய்து கொண்டு உங்கள் இலாபங்களையோ, நஸ்டங்களையோ வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும், இரண்டுமே ரிஸ்க் தான் என்றாலும் கூட மியூச்சுவல் ஃபண்ட் வெளிப்படையானது, அது போக திறன் மிக்க ஃபண்ட் மேனேஜர்கள் இருப்பார்கள் என்பதால் உங்கள் முதலீட்டிற்கு போதுமான கியாரண்டியும் கிடைக்கும்.
இலாபகரமான மியூச்சுவல் ஃபண்ட் எது, பாதுகாப்பான மியூச்சுவல் பண்ட் எது?
அதிகளவிலான இலாபத்தை பெற ஈக்குவட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாம், ஆனால் சற்றே ரிஸ்க் ஆனது, காரணம் இங்கு பெரும்பாலான முதலீடுகள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகின்றன, டெபிட் ஃபண்ட்ஸ், கில்ட் ஃபண்ட்ஸ் இரண்டும் பாதுகாப்பான முதலீடுகளாக கருதப்படுகின்றன, இங்கு பெரும்பாலான முதலீடுகள் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.