Monthly Income Scheme-அஞ்சல் அலுவலகத்தின் மாத வருமான திட்டம் (Monthly Income Scheme) மூலம் நீங்கள் மாதம் ரூ.9,250 வரை பெறலாம். இந்த திட்டம், 5 ஆண்டுகள் முதிர்வுக்காலத்தில், அரசு ஆதரவு பெற்ற பாதுகாப்பான சேமிப்பு திட்டமாக செயல்படுகிறது. இது தனிநபர் மற்றும் கூட்டுக் கணக்குகளுக்கான முதலீட்டிற்கு வழிவகுக்கிறது.
அஞ்சல் அலுவலகத்தின் மாத வருமான திட்டம் (Monthly Income Scheme) மூலம், நீங்கள் மாதம் ரூ.9,250 வரை பெறலாம். இந்த திட்டம், அரசு ஆதரவு பெற்ற சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக, பாதுகாப்பான மற்றும் நம்பகமானதாக இருக்கிறது.
முதிர்வு காலமாக 5 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. முதலீட்டு வரம்பு, தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம்.ஒரு வருடத்திற்க்கு வட்டி விகிதம் 7.4% ஆகும்.
இந்த திட்டத்தில், நீங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான கணக்குகளைத் திறந்து, மாதாந்திர வட்டியுடன் பணத்தை பெறலாம். முதிர்வு நாளில், உங்கள் முதலீட்டு தொகை திருப்பி அளிக்கப்படும்.
1 முதல் 3 ஆண்டுகளில் தொகையை முன்கூட்டியே எடுக்க விரும்பினால், 2% குறைக்கப்படும்.மேலும், 3 ஆண்டுகள் கழித்து 1% குறைக்கப்படும்.
மாதாந்திர வருமானமாகரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.3,083 கிடக்கும். ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.5,550 பெறலாம். கூட்டு கணக்கு மூலம் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.9,250 பெறலாம்.