Milk Vending Machine- நாமக்கல்லை சேர்ந்த இளம் பொறியாளர் ஒருவர், தன் தந்தைக்காக புதிய பால் மெசின் ஒன்றை கண்டு பிடித்து கொடுத்து, ஒரு கிராமத்தையே வியக்க வைத்து இருக்கிறார்.
நாமக்கல்லை சேர்ந்த இளம் பொறியாளர் ஒருவர், தன் தந்தைக்காக புதிய பால் மெசின் ஒன்றை கண்டு பிடித்து கொடுத்து, ஒரு கிராமத்தையே வியக்க வைத்து இருக்கிறார்.
நாமக்கல்லை சேர்ந்த இளம் பொறியாளர் பாலா, இவரது தந்தை மாடுகள் வைத்து, பால் கறந்து அதை கால் கடுக்க நடந்து வீடு வீடாக சென்று ஊற்றி வருவார் போல. அதை பார்த்துக் கொண்டே இருந்த மகனுக்கு தந்தையின் வேலைச் சுமையை குறைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கிறது. உடனடியாக அதற்கான வேலைகளையும் முன்னெடுத்து இருக்கிறார் பாலா.
அதன் விளைவாக உருவானது தான், இவரின் கண்டு பிடிப்பான அந்த பால் மெசின். அதை அவரின் கிராமத்தின் நடுவில் நிறுவி இருக்கிறார். தற்போது அவரது அப்பா பாலை கறந்து மட்டுமே கொடுக்கிறார். மகன் அதை மெசினில் ஊற்றி விட்டு வந்து விடுகிறார். பொது மக்கள் மெசினில் ரூபாயை செலுத்தி விட்டு பாலை பிடித்து செல்கின்றனராம். இந்த மெசினில் 5 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும், ருபாயை செலுத்தி பாலை பெற முடியுமாம்.
தந்தைக்காக மகன் கண்டுபிடித்த இந்த அரிய கண்டு பிடிப்பை, அந்த கிராமமே வியந்து பார்க்கிறதாம், அது போக தற்போது பாலாவிற்கு இந்த மெசினை தாங்களுக்கும் செய்து கொடுக்க சொல்லி, பல ஆரட்ர்களும் வருகிறதாம், Anyway, அந்த இளம் பொறியாளனுக்கு (மகனுக்கு) எங்களது பிசினஸ் தமிழா டீம் சார்பாக வாழ்த்துக்கள்