• India
```

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது?

Kalaignar Magalir Urimai Thogai Scheme | Kalaignar Urimai Thogai​ | Magalir Urimai Thogai Eligibility in Tamil​

By Dhiviyaraj

Published on:  2025-01-10 14:31:19  |    1045

Kalaignar Magalir Urimai Thogai Scheme-கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க காத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தியை கொடுத்து இருக்கிறது.

Kalaignar Magalir Urimai Thogai Scheme-கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க காத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தியை கொடுத்து இருக்கிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். 

அதில் அவர், "நம் முதலமைச்சர் அவர்களின் அனுமதியைப் பெற்று, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் புதிதாக விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திட்டத்தின் விதிகளை பூர்த்தி செய்யும் மகளிர் அனைவருக்கும், உரிமைத்தொகை வழங்குவதற்கு 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது? என்ற கேள்வி பலரிடம் உள்ளது. அது தொடர்பான விவரங்களை வாங்க  தெரிந்துகொள்ளலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். முக்கியமாக உங்களிடம் ரேஷன் அட்டை, ஆதார் கார்டு ஆகியவை எடுத்து செல்ல வேண்டும். மேலும்  குடும்ப வருமானச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். இதையடுத்து உங்களின் விண்ணப்பத்தின் மீதான பரிசீலனை நடைபெறும், கள ஆய்வு நடத்தப்படும். 


இதைத்தொடர்ந்து நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது' குறுஞ்செய்தி உங்களுடைய மொபைல் போனுக்கு வரும். இருப்பினும், குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை என்றால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று நிலைமையை தெரிந்துகொள்ளலாம்


Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola