Magalir Urimai Thogai For All Fact Check - வருகின்ற பொங்கலோடு அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை அரசு வழங்க இருக்கிறது என ஒரு தகவல் பரவி வருகிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Magalir Urimai Thogai For All Fact Check - தமிழக அரசு சார்பில் தகுதியுள்ள மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மாதம் ரூ 1000 அவர்களது வங்கி கணக்கிற்கே வரவு வைக்கப்பட்டு வருகிறது, வரி கட்டுபவர்களும், அரசு வேலைகளில் பணி புரிபவர்களும், பெண் தொழில்முனைவோர்களுக்கும் இத்திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, இத்திட்டத்தின் கீழ் கிட்டதட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் கிட்டதட்ட 2 கோடியே 40 இலட்சம் ரேசன் கார்டுகள் இருக்கிறது, அவர்களுள் சில தகுதி உள்ளவர்களுக்கும் இத்திட்டம் விடுபட்டு இருப்பதாக தகவல், ஆனால் தற்போது சில தினங்களாக தமிழக அரசு அனைத்து அட்டை தாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வருகின்ற ஜனவரிக்கு அப்புறம் வழங்க இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவிக் கொண்டு வருகிறது.
இந்த தகவல்களால் தமிழகத்தில் மகளிர் பலரும் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், அந்த தகவல் உண்மையில்லை என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு இருக்கிறது, சமூக வலைதளங்களில் பரவி வரும் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்பது குறித்து அரசு எதுவும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை, அது யாரோ பரப்பி விட்ட வதந்தி மட்டுமே என கூறப்படுகிறது,
ஆனால் தகுதியுள்ளவர்களுக்கு நிராகரிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்கள் மீண்டும் ஆராயப்பட்டு, அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மீட்டுக் கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது, இருந்தாலும் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்பது 2026 எலக்சனை முன்னிட்டு ஓட்டு வங்கியை தூக்கும் நோக்கில் அறிவிக்கப்படலாம் என்றதொரு கருத்தும் இருந்து வருகிறது.