உடலில் முக்கியமான உறுப்பாக கல்லீரல் கருதப்படுகிறது. அதனை எப்படி சுத்தப்படுத்த வேண்டும்
நம் உடலில் முக்கியமான உறுப்பாக கல்லீரல் கருதப்படுகிறது. அதனை எப்படி சுத்தப்படுத்துவது, உடனடி பராமரிப்பு போன்றவற்றை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
2 லிட்டர் தண்ணீர்
1 எலுமிச்சை - சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளவும்
1 எலுமிச்சை - சிறு துண்டுகளாக வெட்டவும்
1 வெள்ளரிக்காய் - துண்டுகளாக வெட்டவும்
5-6 புதினா இலைகள்
செய்முறை:
*2 லிட்டர் தண்ணீரில் எலுமிச்சைச் சாற்றை கலந்து கொள்ளவும்.
*இன்னொரு எலுமிச்சை பழத்தை துண்டுகளாக வெட்டி அதில் சேர்க்கவும்.
*வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி அதில் சேர்க்கவும்.
*புதினா இலைகளை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பயன்படுத்தும் முறை:
*காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிறிது சிறிதாக இந்த ஜூஸை குடிக்கலாம்.
*அந்த நாள் முழுவதும் வேறு எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது.
*மாதம் ஒருமுறை இதை பின்பற்றலாம்.