சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றம் ஏற்படும் போதெல்லாம் இந்தியாவில் சிலிண்டர் விலைகளும் மாற்றம் செய்யப்படுகின்றன. பொதுவாக, எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் நாளில் இதை புதுப்பித்து வருகின்றன.

அந்தவகையில், 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் கடந்த ஜனவரி 1ஆம் தேதி ரூ.1966-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதன் விலை ரூ.6.50 குறைந்து, ரூ.1959.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு புறம், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் இது ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு மார்ச் 9ஆம் தேதி முதல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை நிலையான நிலையில் தொடருவது குறிப்பிடத்தக்கது.