Loan App Scam News-பொதுவாக பலரும் தற்போது, உடனடி பணத்தேவைக்காக பாதுகாப்பற்ற லோன் செயலியில் பணம் எடுத்து விட்டு, அப்போதைய பிரச்சினையை சமாளித்து விட்டு, ஒரு புதிய பிரச்சினையில் சிக்கி விடுகின்றனர்.
பொதுவாக உங்களுக்கு பணத்தேவை இருந்தால், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ நிதி நிறுவனங்களில் இருந்து மட்டுமே பணத்தை பெறுங்கள், அதுவே லோன் பெற முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை என்றால், கையில் இருக்கும் ஏதாவது ஒரு தங்க நகையை வங்கியில் அடகு வைத்து விட்டு அதன் மூலம் பணத்தை பெறுங்கள். ஆனால் பணப்பிரச்சினை என்பதற்காக அங்கீகரிக்கப்படாத ஏதாவது ஒரு லோன் செயலியில் மட்டும் விழுந்து விடாதீர்கள்.
அவர்கள் உங்கள் பிரச்சனையை தீர்ப்பதற்காக உங்களுக்கு பணம் வழங்குவதில்லை, அவர்கள் பணத்தை கொடுப்பது போல கொடுத்து புதியதாக இன்னொரு பிரச்சினையை உங்களுக்கு கொடுத்து விட்டு செல்வர். உங்களால் திருப்பி கொடுக்க முடியும் என்ற பட்சத்தில், ஒரு அவசர தேவைக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என யாரிடம் ஆவது கேட்டு உடனடியாக திருப்பி கொடுப்பது நல்லது. முடிந்த வரை எந்த வித லோன் செயலியையும் அணுக வேண்டாம்.
ஏன் லோன் செயலி வேண்டாம்?
எப்படி பாதுகாப்பற்ற லோன் செயலியை கண்டு பிடிப்பது?
செயலியே முறையற்றவாறு இருக்கும், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ எந்தவொரு ஒரு நிதி நிறுவனத்தின் கீழும் அந்த செயலி இருக்காது. முகவரி எதுவும் இருக்காது, செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யும் போதே உங்களது டேட்டாக்களை எல்லாம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்கும் இவ்வாறாக இருக்கும் எந்த செயலியையும் நம்பி லோன் எடுக்க வேண்டாம். இவ்வாறாக இருந்தால் அது பாதுகாப்பற்ற லோன் செயலி தான்.
உங்களுக்கு ஏதாவது லோன் தேவைப்பட்டால், அதை நேரடியாக வங்கிக்கு மட்டும் சென்று ஆவணங்களை சமர்ப்பித்து எடுங்கள், மொபைலில் இருக்கும் எந்த செயலியையும் நம்பி ஏமாற வேண்டாம் .