• India
```

Fixed Deposit களுக்கு 8.25% வரை வட்டி...எந்த வங்கி தருகிறது தெரியுமா...?

Current Best FD Scheme

By Ramesh

Published on:  2024-12-09 06:44:17  |    174

Latest Highest FD Rates - வங்கிகளில் போடப்படும் Fixed Deposit களுக்கு 8.25% வரை வட்டி வழங்கும் ஒரு வங்கியின் திட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Latest Highest FD Rates -  தற்போது எல்லாம் மக்களுக்கு Long Term டெபாசிட்களின் மீது பெரிதாக பிரியம் இல்லை, 10 வருடம், 20 வருடம் என அவர்கள் காத்து இருக்கவும் தயாராக இல்லை, அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் 10 சதவிகிதம் கையில் வர வேண்டும் என நினைக்கிறார்கள், அதாவது 1 இலட்சம் டெபாசிட் செய்தால் அது ஒரு வருடத்திற்குள் 1,10,000 ரூபாயாக ஆக வேண்டும் என நினைக்கிறார்கள்.

பல பொதுத்துறை வங்கிகளும் பிக்ஸடு டெபாசிட் ஸ்கீமை ஆக்டிவாக வைத்து இருந்தாலும் கூட அவர்கள் 7% கொடுப்பதே பெரிய விடயமாக பார்க்கப்படுகிறது, ஒரு சில தனியார் வங்கிகள் தான் 7% முதல் 8% வரை வழங்குகின்றன, அதுவும் பெரும்பாலும் நீண்ட வருட திட்டங்களாக தான் இருக்கின்றன, ஆனால் வாடிக்கையாளர்கள் தற்போது அதை விட அதிக வட்டியும் குறைந்த காலமும் எதிர்பார்க்கின்றனர்.



அந்த வகையில் சேலத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிராம வங்கி ஒரு அசத்தலான Fixed Deposit திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது, அற்புதம் 555 என்ற பெயரில் தமிழ்நாடு கிராம வங்கி அறிமுகப்படுத்தி இருக்கும் இத்திட்டத்தில் 1 கோடி வரையில் முதலீடு செய்யலாம், இத்திட்டத்திற்கான கால அளவு என்பது 555 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அதிகபட்சமாக இத்திட்டத்தின் கீழ் 8.25% வரை வட்டி வழங்கப்படுகிறது, குறைந்தபட்ச உத்தரவாதமாக 7.75% வரை வட்டி வழங்கப்படுகிறது, அதாவது மூத்த குடிமக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 8.25% வரை வட்டி வழங்கப்படுகிறது, சாதாரணமாக அதாவது மூத்த குடிமக்கள் அல்லாத பயனர்களுக்கு 7.75% வரை வட்டி வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு கிராம வங்கி அறிவித்து இருக்கிறது.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola